Shruthi hassan opens up: நான் ஆணாதிக்க சமூகத்தில் பணிபுரிகிறேன் - ஸ்ருதி ஹாசன் வெளிப்படையான கருத்து 


இந்திய திரையுலகம் ஆண் ஆதிக்கம் நிறைந்தது. இது சினிமாவில் மட்டும் தான் உள்ளது என குறிப்பிட்டு விட முடியாது என்று சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்ருதி ஹாசன். 


வெளிப்படையான நடிகை ஸ்ருதி:


ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட்டிலும் மிகவும் வெளிப்படையாக தனது கருத்தினை பதிவு செய்ய கூடிய ஒரு நடிகை. அது அவருடைய பணி நிமித்தமாக இருக்கலாம் அல்லது காதல் வாழ்க்கையாக இருக்கலாம். எப்போதுமே பளிச் என்று தனது கருத்தினை வெளிப்படையாக கூறிவிடுபவர். தற்போது ஆண் ஆதிக்கம் நிறைந்த சினிமா துறையை பற்றியும் பேச தவறவில்லை.   


 



நம் சமூகம் ஆணாதிக்க சமூகம்:


டோலிவுட்டில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம் "சலார்". சமீபத்தில் சிலர் நடிகர் உடன் ஏற்பட்ட ஒரு விவாதத்தில் திரைப்படத் துறையில் ஆண் ஆதிக்கம் செலுத்துவது குறித்த கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு  ஸ்ருதிஹாசன் தனது தனித்துமான பணியில் வெளிப்படையான ஒரு பதிலை தெரிவித்துள்ளார். "நமது ஒட்டுமொத்த சமூகமும் ஆண் ஆதிக்கம் நிறைந்தது. அது சினிமாவில் மட்டும் உள்ளது என்று கூறிவிடமுடியது". மேலும் சினிமா மட்டுமின்றி ஒவ்வொரு கலையுமே நாம் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்பே ஆகும். "நாம் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்கிறோம். அதில் சினிமாவை மட்டும் தனிமைப்படுத்துவது நியாயமற்றது. சினிமா என்பது நம்மை சுற்றி இருபவற்றின் பிரதிபலிப்பே ஆகும். இது முட்டை கோழி கதை போல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும். ஆனால் பெரும்பாலும் கலை வாழ்க்கையைப் பின்பற்றுகிறது என நான் நினைக்கிறன்"என்றார் ஸ்ருதிஹாசன். 


 






ஸ்ருதியின் வரவிருக்கும் படங்கள் :


பிரஷாந்த் நீலின் இயக்கத்தில் அதிரடி பொழுதுபோக்கு படமான சலார்  திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோதிடயாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்ருதிஹாசன் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக சிரு 154 மற்றும் பாலகிருஷ்ணாவுடன் NBK 107 உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.