ஊத்தாப்பம் :
இந்தியர்களின் பிரதான உணவுகளில் ஒன்றாக இருப்பது ஊத்தாப்பம் . இதில் பல வகை உண்டு. இதை கல் தோசை என்றும் சொல்வார்கள். ஊத்தாப்பம் காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஊத்தாப்பம் சுவையானது அதே சமயம் அதில் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மேலும் ஊத்தப்பத்தை சாப்பிட உங்களுக்கு சட்னி , சாம்பார் தேவைப்படாது. அதில் உள்ள டாப்பிங்ங்ஸே உங்களுக்கான ஃபிளேவர்களை கொடுத்துவிடும். மற்ற உணவுகளை விட ஊத்தாப்பம் வயிற்றை நிறைக்க கூடியது என்பதால் , சிலர் தங்களின் டயட் சமயங்களிலும் கூட இதனை எடுத்துக்கொள்கின்றனர். உடல் ஆரோக்கியத்தில் காய்கறி ஊத்தாப்பம் சிறந்தது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அர்ஜிதா சிங்
காய்கறி ஊத்தாப்பம் செய்முறை :
- முதலில் உங்களுக்கு தேவையான காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அது வேண்டாம் என நினைத்தால் நீங்கள் நேரடியாகவே காய்கறிகளை ஊத்தப்பத்தில் பயன்படுத்தலாம். புரத சத்தை பெற விரும்பினால் சிறிதளவு பன்னீரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
- முதலில் ஆப்பம் ஊற்றும் தோசை பானை அடுப்பில் வைத்து, தோசை மாவு அல்லது ஊத்தப்பத்திற்காக தயார் செய்த மாவினை பானில் ஊற்றிக்கொள்ளுங்கள்.
- பின்னர் நெய் அல்லது எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஊத்தாப்பத்தை சுற்றி ஊற்றிக்கொள்ளுங்கள்.
- பின்னர் வேக வைத்த அல்லது நறுக்கி வைத்த காய்கறிகளை ஊத்தாப்பம் மேலே தூவி விடுங்கள் .
- அதன் மீது சிறிதளவு இட்லி பொடி அல்லது மிளகாய் பொடி அல்லது மிளகு ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பையும் தூவி விடுங்கள் .
- அடுப்பை குறைவான தீயில் வைத்து , ஊத்தாப்பத்தை மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக விடுங்கள். ஒரு பக்கம் வெந்த பிறகு ஊத்தாப்பத்தை திருப்பி போட்டு அடுத்த பக்கத்தை 2, 3 நிமிடங்களுக்கு வேக விடுங்கள்.
- இப்போது மொறு மொறு ஊத்தாப்பம் தயார். இதனை நேரடியாகவோ அல்லது புதினா , தேங்காய் சட்னியுடனோ சாப்பிடலாம்.