ஸ்ருதன் ஜெய் நாராயணன்:


தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த். மிமிக்ரியில் டாக்டர் பட்டமே பெற்றிருக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பு மட்டுமின்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்டார். 
நடிப்பை தாண்டி இயக்குனர், மற்றும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்டார் சின்னி ஜெயந்த். 


இவருடைய மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தமிழ்நாட்டில் தூத்துக்குடி பயிற்சி துணை ஆணையராக பணியாற்றிய நிலையில், திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதை அடுத்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டார். தற்போது கூடுதல் ஆட்சியராக இருக்கிறார்.


ஃபெஞ்சால் புயல்


இந்த நிலையில் தான் தமிழக்த்தை உலுக்கிய ஃபெஞ்சால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் கன மழை முதல் அதிக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால், இந்த மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது.


சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலையில் தான் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியரான ஸ்ருதன் ஜெய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அதிகளவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். அதோடு, 1500க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். காமெடி நடிகரின் மகனாக இருந்தாலும், இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் மக்களால் ரியல் ஹீரோவாக ஸ்ருதன் ஜெய் பார்க்கப்படுகிறார்.