பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் அவர் ஒரு ஜெர்மானியப் பெண்ணிடம் சகஜமாகப் பேசுகிறார். அந்தப் பெண்ணிடம் ஷாருக்கான தனக்குத் தெரிந்த இன்னொரு ஜெர்மானியப் பெண் பற்றி சில தகவல்களைப் பகிர்கிறார். அப்போது அந்தப் பெண் தனது தில் தோ பாஹல் ஹை படத்தைப் பார்த்துவிட்டு இந்திய சினிமாக்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதாகக் கூறுகிறார். இந்த வீடியோ மிகவும் பழையதுதான். ஆனாலும் ஷாருக்கான் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வீடியோவைக் காண:
கம்பேக் கொடுத்த ஷாருக்:
2018ஆம் ஆண்டு வெளியான ’ஜீரோ’ படத்தின் வணிக ரீதியான தோல்வி ஏற்படுத்திய பாதிப்பில், இருந்த ஷாருக்கான் சிறிது காலம் இடைவெளி எடுத்து படங்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வந்தார்.
இதனிடையே 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கத்தில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஷாருக்கின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகர் ஷாருக்கானை பெரும் மன உளைச்சலில் இச்சம்பவம் தள்ளிய நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் திரண்டன. தொடர்ந்து மும்பை சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான், 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவானது “பதான்”. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியது. முன்னதாக பதான் படத்துக்கு வழக்கம்போல் பாய்காட் பாலிவுட் பிரச்சினைகள் தலைத்தூக்கிய நிலையில், இப்படத்தின் பாடலில் தீபிகாவின் காவி நிற உடை எதிர்ப்புக்களை சம்பாதித்து இந்து அமைப்புகளின் கோபத்துக்கு ஆளானது. ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தாண்டி படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.
ஷாருக் நெகிழ்ச்சி:
முன்னதாக பதான் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக், கோவிட் காலத்தின்போது நான் சில ஆண்டுகள் வேலை செய்யவில்லை. ஆனால் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் என்னால் நேரத்தை செலவிட முடிந்தது. என் குழந்தைகள் ஆர்யன் மற்றும் சுஹானா வளர்வதை என்னால் பார்க்க முடிந்தது.
என்னுடைய கடைசி படம் சரியாக ஓடாதபோது சமைக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன், ரெட் சில்லிஸ் ஈட்டரி என்ற உணவகத்தைத் தொடங்க நினைத்தேன். மக்களை அழைத்து எங்கள் படத்தை நிம்மதியாக வெளியிட அனுமதிக்குமாறு கேட்க வேண்டிய நிலைமை முன்னர் இருந்தது. பதான் படத்தை மக்களுக்காக வெளியிட எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நாம் செய்யும் செயல் வேலைக்கு ஆகாதபோது நம்மை நேசிப்பவர்களிடம் செல்லுங்கள் என்று கூறுவார்கள், எனக்கு அன்பைக் கொடுக்கும் லட்சக்கணக்கானவர்கள் இருப்பது என் அதிர்ஷ்டம்” எனப் பேசியிருந்தார்.