ஸ்ரீதேவி
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகளான நடிகை மகேஸ்வரி 1994 ஆம் ஆண்டு வெளியான க்ராந்திவீர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கருத்தம்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மகேஸ்வரி பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், நேசம், ரத்னா, சுயம்வரம், என்னுயிர் நீதானே என பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கைய நடிகைகளில் ஒருவராக மாறினார்.
மகேஸ்வரியின் கரியரில் முக்கியமான ஒரு படம் என்றால் அஜித் குமார், விக்ரம் உடன் இணைந்து நடித்த 'உல்லாசம்' திரைப்படத்தைக் குறிப்பிடலாம். சினிமா வாய்ப்புகள் குறையவே இந்த படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். 'அதே கண்கள்' என்ற சீரியலில் நடித்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு மொத்தமாக முழுக்கு போட்டார். அவருக்கு பேஷன் டிசைனில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அது சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளார். நடிக்கும் போதும் சரி தொழில் துவங்கிய போதும் சரி மகேஸ்வரிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது நடிகை ஸ்ரீதேவி.
குஷி கபூர்
சமீபத்தில் நெட்ஃளிக்ஸில் ஆர்ச்சீஸ் என்கிற இணையத் தொடர் வெளியாகி உள்ளது. இந்தத் தொடரின் மூலம் நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர் (Kushi Kapoor) நடிகையாக அறிமுகமாகி உள்ளார். ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் முன்னதாக நடிக்கத் தொடங்கி பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது குஷி கபூரும் பாலிவுட் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
அப்படியே சித்தி போல் இருக்கும் குஷி கபூர்
குஷி கபூர் உருவத்தில் தனது சித்தியான நடிகை மகேஸ்வரியை அப்படியே பிரதி எடுத்து வைத்தது மாதிரி இருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.