திரைப்படங்களில் நடிப்பதை சில காலத்திற்கு நிறுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார் ஸ்பைடர் மேனாக நடித்த டாம் ஹோலண்ட்.
ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்து ரசிகர்களின் கவணத்தை ஈர்த்தவர் டாம் ஹோலண்ட். மேலும் இந்தப் படத்தில் தனக்கு இணையாக நடித்த ஜெண்டாயாவை காதலித்து வருகிறார். 27 வயதான டாம் ஹோலண்ட் பொதுவெளிகளில் நடிகராக இருப்பதின் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை தொடர்ச்சியாக பேசி வருபவர். மேலும் ஜெண்டாயா மற்றும் டாம் ஹாலிவுட் திரயுலக்கில் அதிகம் பேசப்படும் காதல் ஜோடிக்களில் ஒன்று.
நடிகரிலிந்து தயாரிப்பாளர்
நடிகராக கலக்கி வந்த டாம் அண்மையில் ஆப்பிள் டிவி நிறுவனம் வழங்கிய தி க்ரவுடட் ரூம் ( the crowded room ) ஆந்தலாஜி வழியாக தயாரிப்பாளராக மாறியுள்ளார். தீவிர மனநல பிரச்சனைகளை எதிகொள்ளும் நிஜ மனிதர்களின் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் நடித்தும் வந்தார் டாம். தர்போது இந்தத் தொடர் முடிவடைந்துவிட்ட நிலையில் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒரு ஓராண்டுக்கு இடைவெளி எடுத்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் டாம். இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கு தகவலாக வந்து சேர்ந்துள்ளது.
ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டு பொறுபுகளையும் எடுத்துக்கொண்டதால் தான் மிகவும் சோர்ந்துப் போனவராக உணர்வதாக தெரிவித்துள்ளார் டாம்.
“நான் இதுவரை என் வாழ்வில் அனுபவித்திராத புதிய வகையான உணர்வுகளைக் கொண்ட தொடர் இது. நடிப்பது மட்டுமில்லாமல் இந்தத் தொடரை தயாரிக்கும் பனி என்னை மிக சோர்வடையச் செய்துவிட்டது. ஒரு நடிகனாக நீங்கள் அந்த கதையின் உணர்வுகளோடு பயணிக்க வேண்டு அதே நேரத்தில் ஒரு தயாரிப்பாளராக படபிடிப்புத் தளத்தில் நிகழும் அன்றாடப் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். அதனால் சுமார் ஒராண்டு காலத்திற்கு எனக்கு ஓய்வுத் தேவைப்படுகிறது.” என கூறியுள்ளார் ஸ்பைடர் மேன் கதாநாயகன் .
The crowded room
1970 ஆம் ஆண்டு நியுயார்க் நகரத்தில் நிகழ்ந்த ஒரு துப்பாக்கிச் சூட்டை மையப்படுத்தி உருவாக்கப் பட்டிருக்கும் தொடர் ’ தி க்ரவுடட் ரூம்’ . மொத்தம் 10 எபிசோட்களை கொண்டிருக்கிறது இந்தத் தொடர் . இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என கருதப்பட்ட பில்லி முலிகன் என்கிற நிஜ மனிதரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் டாம். அமெரிக்க நீதிமன்றத்தில் மிக புகழ்பெற்ற வழக்கு இவருடையது. இந்த ஆந்தலாஜி ஆப்பிள் டிவி யில் வெளியாக இருக்கின்றன.