லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் ஃபகத் பாசில் , விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.


இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிரெண்டானதை தொடர்ந்து, விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த 16ஆம் தேதி தொடங்கி, முதல் நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. கொரோனா காரணமாக தாமதமான படப்பிடிப்பு, அன்று முதல் தொடங்கியது. படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் நடித்து வரும் நிலையில்,  ஃபாகத் ஃபாசில் தற்போது படக்குழுவினருடன் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியுடன், கமல்ஹாசன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலானது. 





இந்நிலையில் விக்ரம் படத்தின் புதிய ஸ்டில்லை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல் திரைத்துறைக்கு வந்து 62 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் விதமாக இந்த புது ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கையில் ரத்தம் படிந்த வாளுடன் கமல் திரும்பி நிற்கிறார். அதில் ஒருமுறை சிங்கம் என்றால் எப்போதும் சிங்கம் தான் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. கமலின் புதிய ஸ்டில்லை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


முன்னதாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கிம்  நடிகர் ஃபாகத் ஃபாசில் இணைந்தார். அப்போது கமல்ஹாசனுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெயராமனின் மகனும், நடிகருமான காளிதாஸும் படத்தில் சமீபத்தில் இணைந்தார். இதுகுறித்து காளிதாஸ் ஜெயராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விக்ரம்  திரைப்படத்தின் பெருங்கடலில் ஒரு துளி இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பதிவிட்டிருந்தார்.