எஸ்பிபிக்கு ரசிகர்கள் உள்ளனர், எஸ்பிபிக்கு பக்தர்கள் உள்ளனர். பாடகர் எம்ஜே ஸ்ரீராம் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். ஸ்ரீராம் சென்னையில் நன்கு அறியப்பட்ட 'மைண்ட், பாடி, சோல்' என்ற தலைப்பில் SPB மற்றும் இளையராஜா என இரண்டு இசை சின்னங்களை கொண்டாடும் நிகழ்ச்சி எல்லா வியாழக்கிழமை இரவும் தி ரெசிடென்சியில் உள்ள பிளாக் & ஒயிட் ரெஸ்டோ பாரில் நடைபெறும். ரெட்ரோ இசை இரவு 550-க்கும் மேற்பட்ட வாரங்களை நிறைவு செய்து, தமிழ் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இது குறித்து எம்ஜே ஸ்ரீராம், "என் சிறுவயதில் டி.எம்.சவுந்தரராஜனின் பாடல்களைக் கேட்டு அவற்றை ஹம் செய்வேன்.


பின்னர், என் வாழ்க்கையை மாற்றிய சங்கராபரணம் (1980) திரைப்படம் வெளியானது, என்னை அந்த படத்தில் ஸ்வாரஸ்யமாகியது, அதில் உள்ள பாடல்களே. SPB சார் பாடிய அந்த பாடல்களை, கிளாசிக்கல் இசையில் எந்தப் பயிற்சியும் இல்லாமலே என்னால் சிரமமின்றி பாட முடிந்தது. பின்பு நான் அவரது பாடல்களை மீண்டும் மீண்டும் பாடினேன், அதை நான் உணரும் முன்பே, அவருடைய பக்தன் ஆனேன், அவர் என் கடவுளாகிவிட்டார். மேடையில் அவரது பாடலைப் பாடும் வாய்ப்பு எனக்கு முதன்முதலில் 1985 இல் கிடைத்தது. ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நண்பர் ஒருவர் மேடையில் ஏறும்படி வற்புறுத்தினார், அந்த நேரத்தில் எல்லோராலும் பயங்கரமாக பேசப்பட்டுக்கொண்டிருந்த நினைவெல்லாம் நித்யா திரைப்படத்திலிருந்து 'பணி விழும் மலர்வணம் பாடலை பாடினேன்." என்று கூறினார்.



"பின்னர், பல சந்தர்ப்பங்களில் SPBயுடன் மேடையை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 1993 ல் ஒரு இசை நிகழ்ச்சியின் போது, ​​நான் 'அந்திமழை பொழிகிறது' பாடலைப் பாடினேன், அப்போது SPB சார் என்னிடம் வந்து 'வெல் டன்' என்று இரண்டே இரண்டு வார்த்தைகளைச் சொன்னார். மற்றொரு இசை நிகழ்ச்சியில், 'விழியிலே மணி விழியிலே' பாடல் பாடிக்கொண்டிருக்கும்போது, SPB சார் என் தோள்களில் கைவைத்து என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க, நான் வாயடைத்துப் போனேன். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு மாலை நேரத்தில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஒரு சாதாரண உரையாடல் என் இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.


17.9.2009 அன்று நடைபெற்ற 'மைண்ட் பாடி சோல்' இசை இரவில் SPB சார் மற்றும் இளையராஜா சார் கலந்துகொண்டிருந்தார்கள். இரண்டு இசை முன்னத்தி ஏர்களுக்கு முன் என் பாடலை சமர்ப்பணம் செய்தேன். ரெட்ரோவான பாடலை ஒரு ரெஸ்டோ பாரில் இசைக்கும் புது ஐடியா இசை ஆர்வலர்களுக்கு ஒரு ஃப்ரெஷ் மாற்றமாக இருந்தது. அப்போதிருந்து, எனது குழு ஒவ்வொரு வியாழக்கிழமையும் அங்கு நிகழ்ச்சி நடத்துகிறது. கோரோணா காலத்தின்போது கூட, காணொளி மூலம் நிகழ்ச்சி நடத்தினோம். எஸ்பிபி சார் இசை இரவு பற்றி மிகவும் ஆர்வத்துடன் இருந்தார், அவர் சில முக்கிய நாட்களில் எங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதரவளித்தார். 'மைண்ட் பாடி மற்றும் சோல்' நிகழ்ச்சியின் 100 வது வாரத்தில், "ஒரு பாரில் உள்ள பார்வையாளர்கள் ஒவ்வொரு வாரமும் ரெட்ரோ இசையுடன் ஒட்டிக்கொள்ள செய்வது அவ்வளவு எளிதல்ல, நீங்கள் அற்புதமான வேலையைச் செய்துள்ளீர்கள் ' என்றார்.



எஸ்பிபி சார் நான் பாடும் போது செய்த தவறுகளை கண்டுகொண்டு அவற்றை சரிசெய்வார். ஒருமுறை 'கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன்' என்று பாடியபோது, ​​அவர், 'அப்படிப் பாடக்கூடாது’ என்று சொல்லி, எனக்காக முழு பல்லவியையும் பாடினார். இது குருவிடம் இருந்து சிஷ்யன் கற்றுக் கொள்ளும் ஒரு தருணம். எங்கள் கடைசி சந்திப்பு 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்தது. நான் அவரைக் கண்டு அவருக்கு ஒரு ஆல்பம் கொடுக்கச் சென்றேன், அதில் அவருடைய படங்களின் தொகுப்பும் இருந்தது. லாக்டவுனின் போது, ​​நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். அவருடைய சில அரிய பாடல்களைத் தோண்டி எடுத்து அவருக்கு அனுப்புவேன். அவற்றை பாடியது கூட நினைவில் இல்லை என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்புவார்.


இன்று, அவர் நம்மிடம்  இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் நம் வாழ்வின் ஒரு பகுதியாகத் தொடர்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் பெயரை வலது உள்ளங்கையின் பின் புறத்தில் பச்சை குத்திக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் நான் மைக்கை பிடிக்கும்போதும், ​​அவர் என் கையைப் பிடிப்பது போல உணர்கிறேன், அது எனக்கு ஒரு புதிய எழுச்சியைத் தருகிறது. எஸ்பிபி சாரின் பாடல்கள்தான் என் பாடும் வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றது, நான் அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்." என்று SPB யுடனான ஸ்வாரஸ்யமான தருணங்களென நடிகர் மற்றும் பாடகருமான எம்.ஜே. ஸ்ரீராம் பகிர்ந்துகொண்டுள்ளார்.