இசையால் ஆளும் கோமான் !
இசை உலகில் தவிர்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எந்த மனநிலையில் இருந்தாலும் எஸ்.பி.பி-யின் குரலும் இசையும் அத்தனை ஆறுதலாக இருக்கும். தனது இறுதிகாலம் வரையிலும் எஸ்.பி.பி பாடல்கள் பாடினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனளிக்காமல், 2020 செப்டம்பர் அன்று உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.
அவரின் கடைசி வார்த்தை இதாங்க !
எஸ்.பி.பி-யின் சகோதரியும் பாடகியுமான சைலஜாவின் கணவர் சுதாகரை பலருக்கு தெரிந்திருக்கும் . சின்னத்திரை நடிகரான இவர், எஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்வு ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். ஷூட்டிங் ஒன்றிற்காக கிளம்ப தயாராக இருந்த எஸ்.பி.பி 15 நாட்கள் படப்பிடிப்பு செல்ல வேண்டும் என சுந்தரிடம் கூறியிருக்கிறார். மேலும் “ நாளை கிளம்புகிறேன் ... “ என்ற வார்த்தைதான் சுந்தரிடம் கூறிய கடைசி வார்த்தையாம். அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து மருத்துவனமையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறி வீடியோ ஒன்றினை பகிர்திருக்கிறார். மருத்துவர்கள் எஸ்.பி.பி மீண்டுவிடுவார் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர். என்றாலும் அவர் திரும்ப வரவே இல்லை. அவர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தையை மறக்கவும் முடியவில்லை என தெரிவித்திருக்கிறார் சுந்தர்.
விருதுகள் :
கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும், ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கர்நாடகா, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் . இது தவிர இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (2001), பத்ம பூசண் , பத்ம விப்பூசன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது.