பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த தற்போது ஹைதராபாத் புறப்பட்டுள்ளார்.

Continues below advertisement

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பல ஆண்டுகள் கழித்து மீனா மற்றும் குஷ்பூ ரஜினியுடன் இணைந்து நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. அக்டோபர் மாத வாக்கில் அந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதியும் செய்தது. அதன் பிறகு 2020-ஆம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து முடித்தபிறகு அண்ணாத்த படத்திற்கான பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த்.

#SuperstarRajinikanth Leaves To #Hyderabad for the shoot of #Annaatthe!!! #AnnattheDiwali#Thalaivar #Superstar #Rajinikanth@sunpictures @directorsiva@immancomposer @khushsundar@Actressmeena16 #Nayanthara @KeerthyOfficial@prakashraaj@V4umedia_ pic.twitter.com/n9WJeHCmPS
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 8, 2021

ஆனால் கொரோனா பரவலால் அடுத்தடுத்து இரண்டுமுறை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஹைதராபாத் படப்பிடிப்பில் கலந்துகொள்ள புறப்பட்டுள்ளார் ரஜினிகாந்த்.