கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு இலவசப் பேருந்து


நாட்டுப்புற இசைக் கலைஞர்களையும் , கலை இலக்கிய செயற்பாடுகளில் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த பல கலைஞர்களை தொடர்ரச்சியாக ஆதரித்தும் கெளரவித்தும் வருகிறது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. இதன்படி கடந்த ஆண்டு கலைமாமணி விருது பெற்ற மூத்த கலைஞர்கள் பத்து பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கியது. மேலும் இயல் இசை நாடக மன்றம் சார்பாக நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் தங்களுக்கு தேவையான இசைக்கருவிகளை வாங்குவதற்காக 500 கலைஞர்கள்க்கு தலா 10 ஆயிரம் வழங்க இருப்பதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.


தமிழக சட்டசபையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி கலை பண்பாட்டுத்துறை சார்பில் 5 புதிய அறிவிப்புகளையும், அருங்காட்சியகங்கள் துறைசார்பில் 7 புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளி
யிட்டார். அதன்படி கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 60 வயது நிறைவடைந்திருந்தால் அவர்களுடன் உதவியாளர் ஒருவரும் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்கிற அறிக்கை வெளியிடப் பட்டது. தமிழக அரசின் இந்த முன்னெடுப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சங்கம் சார்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 


மு.க ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் பாராட்டு






தென் இந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் " பணிவான வணக்கத்திற்கும், பேரன்பிற்கும், பெரு மரியாதைக்கும்
உரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு,
நெஞ்சார்ந்த வணக்கம்.
கலைமாமணி விருது வாயிலாக கலைஞர்களுக்கு சமூகத்தில்
அங்கீகாரமும், மரியாதையும் அளித்தது மட்டுமின்றி, அவர்கள்
அன்றாட வாழ்விலும் பயன் பெறும் வகையில், அந்த கலைஞர்கள்
அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கவும், 60 வயது கடந்த
முதியோருக்கு துணையாக செல்லும் ஒரு நபருக்கும் அச்சலுகையை
நீட்டித்தும் ஆணை பிறப்பித்த தமிழ்நாடு அரசுக்கும். மாண்புமிகு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தென்னிந்திய
நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றி மற்றும் பணிவான
வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.