தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, பாலிவுட் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஜெயிலர் படத்தில் காவாலா பாட்டிற்கு போட்ட நடனம் பட்டி தொட்டியெங்கும் இவரது பெயரை உச்சரிக்க வைத்துள்ளது. தமிழில் பெயர் சொல்லும் அளவிற்கு நல்ல படங்களில் நடித்திருந்தாலும், காவாலா பாட்டிற்கு பிறகு தமன்னாவை ஹாட் குயின் என்றே அழைக்கிறார்கள். பொது விழாவில் கலந்துகொள்ளும் போது அவரது உடையும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.
தமிழை போன்று பாலிவுட் படங்களிலும் ஒரு பட பாடலுக்கு நடனம் ஆடி படவாய்ப்புகளை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமன்னா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒடேலா 2 கலவையான விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. தோல்வி ஒரு பக்கம் விஜய் வர்மாவுடனனா காதல் பிரேக் அப் என மனதில் ரணங்கள் இருந்தாலும் வெளியே சிரித்தபடியே கவலைகளை மறந்து கடந்து செல்கிறார். பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் தமன்னா சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் போஸ்ட் செய்யும் புகைப்படத்தை ரசிகர்கள் வருணித்து கவிதையால் ரசிக்க தொடங்குகிறார்கள். இந்நிலையில், தமன்னா இன்று ஒரு நிகழ்ச்சியில் பச்சை நிற உடையில் வந்திருந்தார். இதுதொடர்பான வீடியாே சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமன்னா கடந்த சில மாதங்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியிருப்பது தெரிகிறது. அவரது ஒல்லி லுக் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒல்லியாகி இளம் ஹீரோயின்களுக்கே போட்டியாக தமன்னா இருக்கிறார். என்றும் இதைப்பார்த்து ஹார்ட்பிரேக் ஆகிடுச்சு. உண்மையில் இது தமன்னா தானா என்றும் கமெண்ட்களில் பதிவிட்டுள்ளனர்.