சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இருமகள்கள் பற்றி பெரிதாக சொல்ல வேண்டியதில்லை. பொதுதளத்தில் இயங்கும் அவர்களை அனைவரும் அறிந்திருக்கிறோம். மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷ் உடன் திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் அவரிடம் இருந்து பிரிந்தார். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.


இளைய மகள் சவுந்தர்யா. கடந்த 2010 ம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து, வித் கிருஷ்ணா என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் அஸ்வினை பிரிந்த சவுந்தர்யா, விஷாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019 ம் ஆண்டு திருமணம் செய்தார். கடந்த வாரம் இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் இதுவரை நான்கு பேரன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 






இந்நிலையில், ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் முன்னாள் முனைவியுமான ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய நடவடிக்கைகளை பதிவிடுவது வழக்கம். அந்த வரிசையில், தன்னுடைய தங்கை மகனான வித் கிருஷ்ணாவுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ ஒன்றை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. 


அதில், 


‛‛நீங்கள் பெரியம்மா பணியில் இருக்கும்போது, ​​உங்கள் தங்கை மகன் ஒரு வார இரவில் கூடுதல் நேரத்தைப் பெற எப்படி ஓட்டப் பந்தயம் நடத்துவது என்று உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். சவுந்தர்யாரஜினிகாந்த் உங்களுக்கு இங்கே ஒரு புத்திசாலி இருக்கிறார்’’


என்று அந்த பதிவில் கூறியுள்ளார் ஐஸ்வர்யா. 






இரு கார்களை வைத்துக் கொண்டு, அதை எப்படி செலுத்த வேண்டும் என்றும் ஐஸ்வர்யாவுக்கு பாடம் எடுக்கும் கிருஷ்ணாவின் குறும்பு தனம் தான், அந்த வீடியோவின் சிறப்பு. இதற்கிடையில், ஐஸ்வர்யாவின் இந்த பதிவுக்கு, ரஜினி ரசிகர்கள் சிலாகித்து பதில் போட்டு வருகின்றனர். ‛தலைவர் பேரன் என்றால் சும்மாவா...’ என்று பல பதிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன.