இந்திய சினிமா உலகில் முக்கிய நடிகராக அறியப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம்  வருகிற தீபாவளி பண்டிகையின் போது வெளியாகவுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தை குடும்பத்துடன் பார்த்த மகிழ்ச்சியை ஹூட் செயலியில் வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு முழு உடல் பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனைக்கு சென்றார், அப்போது மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ரஜினிகாந்த் நலமுடம் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பி விடுவார் என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.






இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா , தனது ஹூட் பக்கத்தில் புதிதாக இணைந்துள்ள அண்ணாத்த இயக்குநர் சிவாவை வரவேற்றுள்ளார். அப்போது பேசிய சௌந்தர்யா
"நீங்க அண்ணாத்தல என்ன பண்ணிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கல...படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் , கண்ணீருடன் சிவா சாரின் கையைப்பிடித்துக்கொண்டு அத்தனை முறை நன்றி கூறினேன். நீங்க அண்ணாத்த படத்தில் செய்தது மேஜிக் இல்லை. எனக்கு என்ன வார்த்தை சொல்வதென்றே தெரியவில்லை...உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் மிகவும் நன்றி..கண்டிப்பாக ‘தலைவரின்’ரசிகையாகவும் , அவருடைய மகளாகவும் , அப்பாவை நீங்க பார்த்துக்கிட்ட முறை வச்சு சொல்லுறேன்.. நீங்களும் அப்பாவும் அண்ணாத்த படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து படங்கள் பண்ணனும் சார் “ என தெரிவித்துள்ளார்.







முன்னதாக தந்தையின் உடல்நலம் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்த சௌந்தர்யா, கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கடவுளில் ஆசிர்வாதத்தாலும் உங்களின் வேண்டுதலாலும் அப்பா நலமுடன் உள்ளார் மேலும் விரைவிலையே அவர் வீடு திரும்புவார் என தெரிவித்திருந்தார். அதே போல புனித்ராஜ் சாரின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது . அதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. புனித் சார் கிட்ட மூன்று நாட்களுக்கு முன்னால்தான் பேசினேன். இது மிகுந்த அதிச்சியாகவுள்ளது.எங்கள் குடும்பத்தில் ஒருவரான அவரின் குடும்பத்தினருக்கும் , ரசிகர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.