இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்திலும், ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உறுதி செய்தனர்.


ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது என குறிப்பிட்டு, “18 ஆண்டு காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். 






எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.




இதற்கிடையே சௌந்தர்யாவின் விவாகரத்தை பார்த்துவிட்ட ரஜினி ஐஸ்வர்யாவின் விவாகரத்தையும் தற்போது பார்த்துவிட்டார். வயதான காலத்தில் ஒரு தந்தையாக இது அவருக்கு மிகப்பெரும் மன உளைச்சலை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதேசமயம் ரஜினிகாந்த் மனரீதியாக மிகவும் தைரியமானவர். சௌந்தர்யாவின் விவாகரத்தையும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கையையும் ரஜினி எப்படி பக்குவமாக கையாண்டாரோ அதேபோல்தான் ஐஸ்வர்யாவின் விவகாரத்திலும் நடந்துகொள்வார் என கருதப்படுகிறது.






இந்நிலையில் ரஜினியின் இரண்டாவது மகளும், ஐஸ்வர்யாவின் தங்கையுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் ரஜினியின் மடியில் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் சிறு வயதில் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து அதை ட்விட்டரின் முகப்பு படமாகவும் வைத்திருக்கிறார். இறுதியில் இரண்டு மகள்களும் தந்தையின் மடியை தேடிவந்துவிட்டோம் என்பதை உணர்த்துவதுபோல் அந்தப் புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண