சொர்கவாசல்
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் அர்.ஜே பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம் சொர்கவாசல் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. செல்வராகவன் , பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , நட்டி , சானியா ஐயப்பன் , அந்தோனி தாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிறிஸ்டோ ஸேவியர் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் தமிழ் பிரபா, சித்தார்த் விஸ்வநாத் , அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்கள். சொர்கவாசல் படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சொர்கவாசல் விமர்சனம்
1990 களில் மத்திய சிறைச்சாலையை மையப்பகுதியாக கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கிறது சொர்கவாசல். பல்வேறு உண்மை சம்பவங்களை மையமாக ராவான ஒரு படமாக இப்படம் உருவாகியிருப்பதாகவும் நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி நடிப்பு
இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி இப்படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி தனது கரியரில் நடித்த சிறந்த படம் சொர்க்கவாசல் என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்