post office money double scheme: கிசான் விகாஸ் பத்ரா எனும் தபால் நிலைய சேமிப்பு திட்டம் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


தபால்நிலைய சேமிப்பு திட்டம்:


ஒவ்வொருவரும் தங்கள் வருவாயில் இருந்து சிறிது தொகையைச் சேமிக்க விரும்புகின்றனர். அதன் மூலம்,  வலுவான வருமானத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்யவும் முயல்கின்றனர். அத்தகைய அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா அல்லது கேவிபி திட்டம்.  இதன் சிறப்பு என்னவென்றால், முதலீட்டாளர்களின் பணம்115 மாதங்களில் இரட்டிப்பாக உயருகிறது என்பது தான். ஆச்சரியம் அளிக்கக் கூடிய இந்த சிறப்பு திட்டத்தை பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளது.



பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம்


பணத்தை முதலீடு செய்து அதிக ஆபத்து இன்றி லபாம் சம்பாதிக்க விரும்பினால், இந்த பிரபலமான தபால் அலுவலக சேமிப்பு திட்டமான கிசான் விகாஸ் பத்ரா (KVP) உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். குறிப்பாக அதிக லாபம் ஈட்டுவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த அரசு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் (இரட்டை வருமான திட்டம்). 100 இன் மடங்குகளில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை என்பது சிறப்பு. முதலீட்டாளர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.


எத்தனை கணக்குகள் திறக்க முடியும்?


கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ், ஒற்றை மற்றும் கூட்டு கணக்குகளைத் திறக்கலாம். தொடக்கத்தில் விவசாயிகளுக்கு என பிரத்யேகமாக இருந்த இந்த அரசு திட்டத்தில், தற்போது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். குழந்தையின் கணக்கைத் திறக்க, பாதுகாவலர் குழந்தையின் ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் KYC படிவத்தை வழங்க வேண்டும். பாதுகாவலரின் ஆதார் அட்டையும் அவசியம். இதனுடன், ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். இதற்கும் வரம்பு இல்லை. 2, 4, 6, கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம்.


வட்டி விகிதம் & முதலீட்டு விவரங்கள்:


இந்தத் திட்டம் 7.5 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களில் முதிர்ச்சியின் போது ரூ.10 லட்சத்தைப் பெறுவீர்கள். அதாவது உங்கள் ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ரூ.5 லட்சம் வட்டி கிடைக்கும்.


வரி பரிசீலனை:


இந்தத் திட்டத்தில் வரும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே உங்கள் முதலீட்டைத் திட்டமிடும்போது அதைக் கணக்கிட வேண்டும்.


திட்டத்திற்கான கணக்கை தொடங்குவது எப்படி?



  • கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) திட்டத்தை தொடங்க அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் செல்லவும்

  • அஞ்சல் அலுவலக ஊழியர்களிடம் KVP விண்ணப்பப் படிவத்தைக் கேட்கவும்

  •  உங்கள் விவரங்கள் மற்றும் KYC தகவலுடன் (ஆதார், பான், முதலியன) படிவத்தை நிரப்பவும்.

  • அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்

  • முதலீடு செய்ய விரும்பும் தொகையைத் தீர்மானிக்கவும் (குறைந்தபட்சம் ₹1,000, அதிகபட்ச வரம்பு இல்லை)

  • முதலீட்டுத் தொகையை ரொக்கம், காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் செலுத்துங்கள்

  • உங்கள் பணம் செலுத்தப்பட்டதும், முதலீட்டிற்கான சான்றாக KVP சான்றிதழைப் பெறுவீர்கள்.