அசுரன், பாவக் கதைகளின் ஒரு இரவு பாகம் ஆகியவற்றைத் தொடர்ந்து விஜய் சேதிபதி நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம் 'விடுதலை'. 


வெற்றிமாறனின் - விஜய் சேதுபதி காம்போ


இப்படம், தமிழின் சமகால எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் நாயகன் விஜய் சேதுபதியுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இளையராஜா இசை


’தேசிய விருது’ வென்ற இயக்குநரான வெற்றிமாறன், இப்படத்தில் முதன்முதலாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னதாக விஜய் சேதுபதி தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் சூரி கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.


 






மாஸ் காட்டும் சூரி


’விடுதலை’ படத்தில் காவலர் வேடத்தில் நடிக்கும் நடிகர் சூரி நடித்து வருகிறார். சூரி மற்றும் பிற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூன் 10ஆம் தேதி வரை சிறுமலையில் நடைபெறும் என முன்னதாகத் தகவல் வெளியானது.


மேலும், படப்பிடிப்பின்போது சிறுமலை கிராமத்தில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் கிராம மக்களோடு சூரி இணைந்து ஆடிய நடன வீடியோ முன்னதாக இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


 






இப்படத்தில் நக்சல் போராளியாக விஜய் சேதுபதி நடிக்கும் நிலையில், படத்தின் ஷூட்டிங், சத்தியமங்கலம், பண்ருட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.