இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கௌரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கியும் வருகிறது. இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதில், நடிகர் தனுழ்ஹ், விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், இசை அமைப்பாளர் டி.இமான், நடிகர் பார்த்திபன், குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் ஆகியோருக்கு தேசிய விருதுகள் அளிக்கப்பட்டன. 


இந்நிலையில் இன்று மாலை மத்திய அரசால் 68வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேசிய விருது விழாவில் நடிகர் சூர்யா நடித்து உலக சினிமா கவனத்தினை ஈர்த்து ஆஸ்கார் வரை சென்ற சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 






இந்தசூழலில், தற்போது சூர்யாவின் ரசிகர்கள் சூரரைப் போற்று திரைப்படம் நிச்சயமாக தேசிய விருது விழாவில் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் ட்விட்டர் பக்கங்களில் #SooraraiPottru ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


சூரரைப் போற்று :


சுதா கொங்கரா இயக்கத்தில் உண்மை கதையினை மையமாக கொண்டு சூர்யாவினை வைத்து இயக்கிய திரைப்படம் தான் சூரரைப்போற்று. கிராமத்தில் பிறந்து எப்படியாவது விமானத்தினை இயக்கி விட வேண்டும் என்று துடிப்புடன் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா, எப்படி வெற்றி பெறுகிறார் என்பர் தான் கதைக்களம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.  இப்படம்  ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான சூரரைப்போற்று ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது.






அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்த சூரரைப்போற்று திரைப்படம் ஏன் திரையரங்குகளில் வெளியிடவில்லை என அனைத்து தரப்பு ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. ஓடிடி தளத்தில் சூரரைப்போற்று களமிறக்கப்பட்டாலும் தணிக்கை சான்று பெற்று இருந்தது. அதன் காரணமாக சூரரைப்போற்று திரைப்படம் தேசிய விருது விழாவுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வருகிற 23 ம் தேதி (நாளை) நடிகர் சூர்யா தனது 47வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்கள் தேசிய விருதுக்கு தேர்வானால் சூர்யாவிற்கு டபுள் கிப்ட்டாக அமையும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண