ஜெயித்த மாறன் சூர்யா.. 47-வது பிறந்த நாளில் மீண்டும் ரிலீஸ் ஆகும் சூரரைப்போற்று, ஜெய்பீம்..

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் 47வது பிறந்த நாளில் சூரரைப்போற்று, ஜெய் பீம் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. நாளை நடிகர் சூர்யா தனது 47வது பிறந்த நாளினைக் கொண்டாடுகிறார்.

Continues below advertisement

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் 47வது பிறந்த நாளில் சூரரைப்போற்று, ஜெய் பீம் திரைப்படங்கள்  ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. நாளை நடிகர் சூர்யா தனது 47வது பிறந்த நாளினைக் கொண்டாடுகிறார். 

Continues below advertisement

நடிகர் சூர்யா நாளை தனது 47வது பிறந்த நாளினை கொண்டாவவுள்ள நிலையில், ஏற்கனவே அவரது ரசிகர்கள் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்விருது அவருடைய பிறந்த நாள் பரிசாக அமையும் என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த படம் சூரரைப் போற்று திரைப்படம் மொத்தம் ஐந்து விருதுகளை தட்டித்தூக்கியுள்ளது. இதில் நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான விருதினைப் பெறுகிறார். மேலும், சிறந்த படத்திற்கான விருது சூரரைப் போற்று படத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் படத்தின் தயாரிப்பாளராகவும் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினர் விருதினைப் பெறுகின்றனர். 

சூரரைப் போற்று படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட சூர்யா மற்றும் ஜோதிகா முடிவு செய்த நிலையில், கடும் எதிர்ப்புகளை திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், தமிழ் சினிமாவுற்கு ஓடிடி எனும் ட்ரெண்டினை உருவாக்கியதோடு நம்பிக்கையினையும் கொடுத்தவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இந்நிலையில் இப்படத்திற்கு மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ளது. 

சூரரைப்போற்று ரீ ரிலீஸ்

தொடர் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு ‘ கம்பேக்’ படமாக அமைந்த திரைப்படம்  ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு அமேசான் ஓடிடிதளத்தில் வெளியிடப்பட்டது. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே போல இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இந்த இரண்டு படங்களும் அந்த தளத்தில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்தப்படங்களை  திரையில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் தற்போது சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட இருக்கிறார் பிரபல தயாரிப்பாளரான கே.இ. ஞானவேல்ராஜா.

சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஜூலை 22 முதல் ஜூலை 24-ஆம் தேதி அதாவது அந்த மூன்று நாட்களில்  இந்தப்படங்களை சென்னையின் பாடி பகுதியில் இருக்கும் க்ரீன் சினிமாவில் திரையிட திட்டமிடப்பட்டது. இதில் 23 ஆம் தேதி சூரரைப்போற்று படம் காலை 4 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது.    ஓடிடியில் வெளியான சூப்பர்ஹிட் படங்களை தியேட்டரில் பார்க்க சென்னை சுற்றுவட்டார சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola