தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்ரா இயக்கத்தில் வெளியான படம் ’சூரரைப் போற்று ‘ (Soorarai Pottru). இந்த படம் இந்தியாவில் எளியோரும் பயணம் செய்யும் வகையில் பட்ஜெட் விமான சேவையை அறிமுகப்படுத்திய ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியா அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பல பிரபலங்களும் படத்தை வெகுவாக பாராட்டினர். சூர்யாவும் ஒரு தனிமனிதன் பலருக்கான கனவுகளை சுமந்துக்கொண்டு எப்படி சிரமப்படுகிறார் என்பதை அப்படியே திறையில் நடித்து காட்டியிருந்தார். அவருக்கு ஈடாக அபர்ணா பாலமுரளியும் கலக்கியிருந்தார். இந்த நிலையில் படம் ஹிந்தியில் ரிமேக் செய்யப்பட்டு வருகிறது.
இப்படத்தில் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். தமிழில் இந்தப்படத்தை இயக்கிய சுதா கொங்கரோவே இந்தியிலும் இயக்கி வருகிறார். தற்போது வெளியான தகவலின்படி நடிகர் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் இந்தி சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து புகைப்படத்துடன் கூடிய ட்வீட் ஒன்றை சூர்யா பதிவிட்டுள்ளார். அதில், மாறா மீண்டும் உயிர்ப்புடன் வருகிறது. சிறப்புத் தோற்றத்தில் வந்தது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட்(Abundantia Entertainment) நிறுவனங்கள் இணைந்து சூரரைப்போற்று இந்தி பதிப்பை தயாரித்து வருகின்றனர்.