மிர்ச்சி சிவா


சென்னை 28 , வா , தமிழ் படம் , வணக்கம் சென்னை , கலகலப்பு ,  உள்ளிட்ட குறிப்பிட்ட சில படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர்களை பெற்றுள்ளார் மிர்ச்சி சிவா. இவர் அடிப்பது மொக்கை காமெடிதான் என்றாலும் எந்த. மொக்கை காமெடிகளை ரசிப்பது தான் ரசிகர்களின் வேலை. சி.எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம் படத்தில் அகில உலக சூப்பர்ஸ்டார் என்று இவருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இன்றைய சூழலில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்திற்கு கடும் போட்டியும் சர்ச்சையும் நிலவி வரும் நிலையில் அகில உலக சூப்பர்ஸ்டார் பட்டத்தை வைத்துக் கொண்டு எப்படி எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கிறார் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது. அந்த கேள்விக்கு தற்போது செம பதில் ஒன்று கொடுத்துள்ளார் மிர்ச்சி சிவா.


எனக்கு போட்டியே இல்ல


நலன் குமாரசாமி இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம்  சூது  கவ்வும் . முதல் பாகம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சூது கவ்வும் 2 படம் உருவாகியிருக்கிறது. சூது கவ்வும் : நாடும்  நாட்டு மக்களும்’ என இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர். சி.வி குமார் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில்  இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். ஹீரோவாக இப்படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார். மேலும் ரமேஷ்,திலக் கருணாகரன் , கவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு  கார்த்திக்.கே தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அதேசமயம் முந்தைய பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தில் கெளரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சூது கவ்வும் 2 படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்றுன நவம்பர் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது . அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த மிர்ச்சி சிவா இப்படி கூறினார் 


" சூப்பர்ஸ்டார் பட்டம் இந்தியா மட்டும் தமிழ்நாடு மட்டும்தான். ஆனால் அகில உலக சூப்பர்ஸ்டார் இந்தியா , யுனிவர்ஸ் , பிளாக் ஹோல் கடந்து சென்றுள்ளது. அதனால் எனக்கு போட்டியே கிடையாது. " 




மேலும் படிக்க : Suriya : சூர்யாவை டார்கெட் செய்து அடிக்கிறார்கள்...தயாரிப்பாளர் தனஞ்சயன் சொன்ன அதிர்ச்சி தகவல்


KR Vijaya: செத்துட்டேன்னு நெனச்சி புதைக்க போனாங்க! அக்கா கே.ஆர்.விஜயா செயலால் முருகன் செய்த அதிசயம்; கேஆர் வத்சலா கண்ணீர்!