செலிப்ரிட்டி என்றால் வீட்டில் செல்லப் பிராணியும் இருக்கும். பெரும்பாலும் செல்லப் பிராணியாக நாய்க்குட்டிகள் தான் வளர்ப்பார்கள். அப்படி சோனு சூட் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறார். அந்த நாய்க்குட்டி தனது கமாண்டுக்கு ஒத்துழைத்து அனைத்தையும் கீழ்ப்படிதலுடன் செய்ய அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சோனு சூட்.


இன்ஸ்டாகிராம் வைரல் வீடியோ:






 


அருந்ததி நாயகன் டூ அதிரவிடும் நாயகன்


அருந்ததி படத்தில் பொம்மாயி என அடிவயிற்றிலிருந்து வில்லன் நடிகர் கூப்பிடும் குரலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டோம். அருந்ததி படத்தின் வாயிலாகத் தான் நமக்கு சோனு சூட் அறிமுகமானார். அதேபோல் சந்திரமுகி படத்தில் கட்டுமஸ்தான உடலுடன் ரஜினிகாந்துடன் அவர் போடும் சண்டையும் ரொம்பவே ஃபேமஸ்.


இதெல்லாம் ஒருபுறம் இருக்கு அண்மைக்காலமாக அவர் சமூக சேவைக்காகவும் அறியப்படுகிறார். கொரோனா காலத்தில்  அவர் அடிப்படை உதவிப் பொருட்களை வழங்கி கவனம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி அவரைப் பிரபலப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். 


ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, கிராமத்தில் மாணவர்களுக்கு ஒழுங்காக சிக்னல் கிடைக்க மொபைல் டவர் அமைத்தது என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.


பாலிவுட் பிரபல நடிகர் சோனுசோட் வீட்டில் சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் விடிய விடிய ரெய்டு நடத்தினர்.  சோனு சூடுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. சோனு சூடின் உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டது.


ஆன்லைன் செயலி ஆரம்பித்த சூட்


எக்ஸ்ப்ளர்கர்’ என்ற பெயரில் புதிதாக சமூக வலைத்தள செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட். 


பயணம், லைஃப்ஸ்டைல் முதலானவற்றில் அதிக கவனம் செலுத்தும் இந்த செயலி மூலமாக பயனாளர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருடன் ஆன்லைனில் கனெக்ட் செய்யவும், தங்கள் வாழ்வின் தருணங்களைப் பகிரவும் பயன்படுத்தலாம். இந்த செயலியின் இணை நிறுவனரான நடிகர் சோனு சூட் இருக்கும் நிலையில், இதன் நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஜிதின் பாட்டியா நியமிக்கப்பட்டார்.