மாடர்ன் லவ் ட்ரெய்லர் வெளியானதை  தொடர்ந்து அந்தத் தொடரின் அனைத்துப் பாடல்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஷான் ரோல்டன் மற்றும் ஜீ.வி பிரகாஷ் குமார் ஆகிய நால்வரின் இசையில் முற்றிலும் வேறுபட்ட அதே நேரத்தில் தனித்துவமான பாடல்களாக அமைந்துள்ளன.


மொத்தம் 14 பாடல்கள் 4 பி.ஜி.எம்.களைக் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அனைத்துப் பாடல்களையும் கவிஞர் யுகபாரதியே எழுதியுள்ளார். இந்த ஆல்பம் சந்தேகமில்லாமல் இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் படப்போகும் ஆல்பம் என்றுகூட சொல்லலாம். இந்தப் பாடல்களைப் பற்றிய சில அடிப்படையான தகவல்களை மட்டும் ஒரு ஜிஸ்ட் பார்க்கலாம்.


நெஞ்சில் ஒரு மின்னல்


இசைஞானி இளையராஜா இன்றுடன் தமிழ் சினிமாவிற்கு இசையமைக்கத் தொடங்கி இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், இந்தப்பாடலை கேட்டால் இப்போது தான் புதிதாக இசையமைக்க வந்திருக்கும் இளைஞரைப்போல் தத்தித்தாவும் ஒரு  காதல் பாட்டை எழுதி, இசையமைத்து பாடியும் உள்ளார்.


'லவ் லவ் என்றே சொல் சொல் பேபி' என்று அவர் பாடும்போது  துள்ளி துள்ளி அடம்பிடிக்கும் ஒரு இளம் காதல் உணர்வு மனதில் உண்டாகிறதில்லையா..? இதுமட்டுமில்லாமல் தீ இன்பமே, பாவி நெஞ்சே,கால விசை, ஆனால், சூரியன் தோன்றுது சாமத்திலே, கண்னில் பட்டு நெஞ்சை தொட்ட மின்னல், காமத்துப்பால், தேன் மழையோ, என்றும் எந்தன் ஆகியப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இந்த பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் யுகபாரதி.இந்த பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்டு உங்களுக்கான பாடலை கண்டுகொள்ளுங்கள்.


பேரன்பே..


யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடல்  கற்றது தமிழ் படத்தில் வரும் உனக்காகத்தானே பாடலை எங்கோ லேசாக உங்களுக்கு நினைவுபடுத்துகிறதா என்று பாருங்கள். யுவன் மற்றும் ஷிவானி பன்னீர்செல்வன் ஆகிய இருவரின் குரலில் ஒரு செம ரொமாண்டிக்கான பாடலாக இருக்கிறது.இதில்லாமல் ஞாயும் என்கிற பாடலையும் யுவன் இசையமைத்திருக்கிறார்.ஆனால் அதிகம் விவரித்து பாடலின் ஃபீலை நாம் கெடுத்துவிட வேண்டாம்


ஜிகர்தண்டா, உறவு


அண்மைக்காலங்களில் நல்ல மெலடிகளை நாம் ஷான் ரோல்டனின் இசையமைப்பில் கேட்க முடிகிறது. சிலர் இவரிடம் அதிகப்படியான இளையராஜாவின் தாக்கம் இருப்பதாக கூறுகிறார்கள். இளையராஜாவின் தாக்கம் இருக்கிறது தான். ஆனால் இளையராஜா ஷான் ரோல்டன் என்பவருக்குள் நிகழ்த்தி இருக்கிறார். அந்த தாக்கத்தை அப்படியே தனது இசையில் காட்டுகிறார் அவர். அதுவே அவரது இசையின் நேர்மையும் ஆகும். வாத்தியாரிடம் கற்றுகொண்ட மாணவன் வாத்தியாரைப் போல் இருப்பதில் தவறேதும் இல்லையே..


ஜிகர்தண்டா என்கிற பாடலில் இந்த மொத்த ஆல்பத்தில் மிஸ் ஆன ஒரு நல்ல ஃபோல்க் தன்மையைக் கூட்டுகிறார் ஷான்.அதே நேரத்தில் காதலுக்காக எல்லாரும் அவரவர் மெல்லிசை ட்யூன்களை கொடுக்கும் போது நாம் மட்டும் சும்மாவா இருக்க முடியும் அதற்காகத்தான் உற்வெனும் பெருங்கதை பாடல். ஒன்று மாற்றி ஒன்று கீச்சொலியிட்டு விளையாடும் இருப் பறவைகளின் இசைவு இந்தப் பாடல் என்று சொல்லலாம்