ரன்வீர் சிங் :


ரன்வீர் சிங் இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவர். பாலிவுட்டின் அசைக்க முடியாத  நட்சத்திரங்களுள் ஒருவர். 2010 ஆம் ஆண்டு வெளியான பேண்ட் சர்மா பாராத்  என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமனார். அனுஷ்கா ஷர்மாவிற்கு ஜோடியாக நடித்த ரன்வீருக்கு முதல் படமே கம்ர்ஷியல் ஹிட்டானது. நகைச்சுவை காதல் படமான அந்த படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியதால் , அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தது. ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும்  ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல் . பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார்.







நிர்வாண புகைப்படம் :


இந்த நிலையில் ரன்வீர் சிங் சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸ் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்தை மாடலாக கொண்டு அதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.இது இணையத்தில் வைரலானதோடு மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.






நடிகை ஆதரவு :


இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இந்திப்பட நடிகையும் , சல்மான் கானின் முன்னாள் காதலியுமான  சோமி அலி , ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். “ ரன்வீர் அசாதாரண வடிவத்தில் இருக்கிறார் மற்றும் அற்புதமான தோற்றத்தில் இருக்கிறார். ஜிம்மில் அவரது கடின உழைப்பிற்கு பலனாகத்தான் இதை பார்க்கிறேன்.ஒரு ஆணோ பெண்ணோ நிர்வாணமாக போஸ் கொடுக்க வசதியாக இருந்தால், அது அவர்களின் விருப்பம்.ரன்வீர் போன்றவர்கள் தங்களது உடலை உலகம் அறிய காட்டுவதற்கு துணிச்சலும் சக்தியும் வேண்டும் . அது அவர்களிடம் இருக்கிறது. நம் வேலையை நாம் பார்க்கலாமே “ என்றார்.