தமிழ் திரையுலகில் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் பாடகர் என்றால் அது பிரதீப் குமாரதான். திருச்சியில் பிறந்த பிரதீப் குமார் முதலில் கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் சினிமா இசையிலும் பாடல்கள் பாட தொடங்கி பலரின் மனதை மயங்க வைத்தார். இவருடைய குரல் கேட்பவர்களுக்கு ஒரு புது உணர்வை தரும் வகையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட இவரின் குரலில் அமைந்த சில டாப் பாடல்கள் என்னென்ன?


1. காதல் கனவே:


விஷ்ணு விஷால், நந்தித்தா நடிப்பில் வெளியான திரைப்படம் முண்டாசுப்பட்டி. இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இதை பிரதீப் குமார் மற்றும் கல்யாணி நாயர் ஆகியோர் பாடியிருப்பார்கள். இப்பாடலுக்கு சீன் ரோல்டன் இசையமைத்திருப்பார். 


"இறகால படகா
நீந்தி காத்தில் நானும்
மிதந்தேனே கடிவாளக்
குதிரையாக எனதான்
நீயும் இழுத்தாயே
மாறாது மனமே மானே
மடிமேலே விழுந்தேன் நானே...."


 



2. ஆகாசத்த நான்:


தினேஷ் நடிப்பில் வெளியான கூக்கூ திரைப்படத்தில் இந்தப் பாடல் உள்ளது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பார். பிரதீப் குமார் மற்றும் கல்யாணி நாயர் கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான பாடல் இது. 


"காம்பத் தேடும்
குழந்தையா உன்னத்
தேடும் உசுரு பசியில கோடி பேரில்
உன்ன மட்டும் அறிவேனே
தொடுகிற மொழியில பேரன்பு போல
ஏதுமில்ல நீ போதும்
நானும் ஏழையில்ல..."


 



3. பூ அவிழும் பொழுதில்:


சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இது சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் வெற்றி கூட்டணியில் ஹிட் அடித்த மற்றொரு பாடல். 


"வான்வெளி மீதே
வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே
அவள் உதித்தாளே


வெண் சிரகேற்றாள்
என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தே
கனவுக்குள் இழுத்தாள்..."


 



4. மாய நதி:


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்று உள்ளது. இந்தப் பாடலை பிரதீப் குமார், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 


"யானை பலம் இங்கே
சேரும் உறவிலே போன
வழியிலே வாழ்க்கை திரும்புதே


தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் என்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்.."


 



5. மோகத்திரை:


விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலும் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் ஒன்று. 


"இமை விரல்களில்
காற்றாய் கை வீசு மலர்
படுக்கையில் மெளனம் நீ
பேசு காதலே தனிமையில்
ஒரு காதல் தாழ் போட்டு
இடைவெளியினில் என்னை
நீ பூட்டு காதலே


தீண்டும் தினம்
தென்றல் மணம் கூந்தல்
இழை வெந்நீர் மழை உன்
காதலால் என்னுள் நூறு கனா.."


 



இவை தவிர ஆசை ஓர் புல்வெளி, ஆகாயம் தீ பிடிச்சா, கண்ணம்மா ... போன்ற பல சிறப்பான பாடல்களை பிரதீப் குமார் பாடியுள்ளார். 


மேலும் படிக்க: அஜித் படத்தின் அடுத்த தயாரிப்பாளர் போனிகபூர் இல்லையாம், வேறு யாரு?