தமிழ் திரைப்பட இசையுலகில் பல படங்களுக்கு இசையமத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். இவர் 1987ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்பட இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?

1.பாட்டு ஒன்னு நான்:

முரளி நடிப்பில் வெளியான புதுவசந்தம் திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை மற்றும் கவிஞர் வாலியின் வரிகள் சிறப்பாக அமைந்திருக்கும். 

இன்று வந்த புது வசந்தம்

என்றும் தங்கும்

தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்

குயில்களுக்கு தடைகள் போடும்

மனிதர் இங்கே யாரு

குரல் கொடுத்தால் நிலவின் முதுகில்

உரசும் நாளை பாரு..”

 

 

2.ஆனந்தம் ஆனந்தம்:

விஜய் சங்கீதா நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். உன்னி கிருஷ்ணன் குரல் மற்றும் ராஜ்குமாரின் இசையில்  இப்பாடல் சிறப்பாக அமைந்திருக்கும்.

 

“இன்னும் நூறு ஜென்மங்கள்

சேர வேண்டும் சொந்தங்கள்

காதலோடு வேதங்கள்

ஐந்து என்று சொல்லுங்கள்...”

 

3. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ:

90 கிட்ஸ்கள் பலரின் ஃபேவரைட் திரைப்படம் சூர்ய வம்சம். இந்தப் படத்தில் அமைந்த சிறப்பான பாடல்களில் ஒன்று இது. இதுவும் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அமைந்த வெற்றி பாடல்களில் ஒன்று. 

 

“கண்ணாடி

பார்க்கையில அங்க

முன்னாடி உன் முகந்தான்

கண்ணே நீ போகையில

கொஞ்சும் கொலுசாக என்

மனந்தான் நெழலுக்கும்...”

 

4. எங்கள் வீட்டில் எல்லா நாளும்:

வானத்தைபோல திரைப்படத்தில் அமைந்த பாடல் இது. இதுவும் 90 கிட்ஸ் பலரின் ஃபேவரைட் பாடலாக அமைந்த ஒன்று. இந்தப் பாடத்தில் விஜய்காந்த், லிவிங்ஸ்டன், பிரபுதேவா, மீனா போன்ற பெரிய நட்சத்திர கூட்டணி நடித்திருக்கும். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையும் படம் வெற்றிப் பெற ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. 

 

“சிலுவைகளை நீ

சுமந்து மாலைகள் எமக்கு

சூட்டினாய் சிறகடிக்கும்

பறவைக்கெல்லாம் வானத்தை

போல மாறினாய் விழியோடு நீ

குடையாவதால் விழிகள்

நனைவதில்லை நெஞ்சில்

பூமழை...”

 

5. இன்னிசை பாடி வரும்:

விஜய்-சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக இந்தப் பாடல் படத்தில் பல முறை ஒலிக்கும். 

“தேடல் உள்ள

உயிா்களுக்கே தினமும்

பசியிருக்கும் தேடல் என்பது

உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே...”

 

இவை தவிர சேலையிலே வீடு கட்டுவா, நன்றி சொல்ல உனக்கு போன்ற பல வெற்றி பாடல்களை எஸ்.ஏ.ராஜ்குமார் தனது இசையில் நமக்கு தந்துள்ளார். 

மேலும் படிக்க: இரவு பொழுதை இனிமையாக்கும் ஜென்சியின் ப்ளே லிஸ்ட் !