தமிழ் திரை இசையில் சிறப்பான பல  வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். இவர் 1994ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். திரைப்பட இசை தவிர திருக்குறளுக்கு இசை அமைக்கும் பணியையும் இவர் மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளார். 13 மணி நேரம் கொண்ட அந்த ஆல்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.  தமிழில் காதல் மன்னன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவருடைய இசையில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?

1. உன்னை பார்த்த பின்பு:

அஜித் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் 'காதல் மன்னன்'. இந்தப் படத்தில் விவேக், அஜித், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிபடுத்திருப்பார்கள். அத்துடன் இந்தப் படத்தில் பாடல்களும் நல்ல ஹிட் அடித்தது. அப்படி ஒரு பாடல் தான் இது. இப்பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். பரத்வாஜ் இசையில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. 

"இரவும் பகலும் சிந்தித்தேன்இவளே இவளே என்றுஇதயம் தெளிந்தேன் இளமைஇளமை பாதித்தேன் கொள்ளைகொண்ட அந்த நிலா என்னைக்கொன்று கொன்று தின்றதேஇன்பமான அந்த வலி இன்னும்வேண்டும் வேண்டும் என்றதே..."

 

2. உன்னொடு வாழாத:

அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான திரைப்படம் அமர்க்களம். இந்தப் படத்தில் இப்பாடல் அமைந்திருக்கும். இந்தப் பாடலுக்கு பரத்வாஜின் இசை மற்றும் சித்ராவின் குரல் சிறப்பாக அமைந்திருக்கும். 

"நீ வீரமானகள்ளன் உள்ளூரும்சொல்லுது நீ ஈரமானபாறை என் உள்ளம்சொல்லுது உன்னைமொத்தம் நேசிக்கிறேன்உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்..."

 

3. பார்த்தேன் ரசித்தேன்:

பிரசாந்த் லைலா நடிப்பில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலில் பரத்வாஜின் இசை சிறப்பாக அமைந்திருக்கும். 

"கட்டழகு கன்னத்தில் அடிக்ககண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்ககம்பன் இல்லை மிச்சத்தை உரைக்கஅடடா அடடா அடடா அடடா..."

 

4. ஆப்பிள் பெண்ணே:

ஶ்ரீகாந்த் மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான திரைப்படம் ரோஜா கூட்டம். இந்தப் படத்தில் இப்பாடல் அமைந்திருக்கும். இப்பாடலில் பரத்வாஜின் இசை மற்றும் ஶ்ரீனிவாஸின் குரலுடன் பாடல் வரிகள் அவ்வளவு அழகாக அமைந்திருக்கும். 

"உலகின் விளிம்பில்நீ இருந்தாலும் அங்கும்வருவேன் அறிவாயாஉயிரை திருகி கையில்தந்தால் ஓகே என்றுசொல்வாயா..."

 

5. பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு:

கமல்ஹாசன்-சினேகா நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. ஸ்ரேயா கோஷல் குரலில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும். 

"நெஞ்சில் விதைத்தேன்முதல் நாள் உனையே என்மடியில் முளைத்தாய்மறுநாள் வெளியே.."

 

இவை தவிர ஆட்டோகிராஃப், திருப்பதி, முனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் பல ஹிட்டான பாடல்களை பரத்வாஜ் அளித்துள்ளார். 

மேலும் படிக்க: shankar Mahadevan | ரசிக்க வைக்கும் சங்கர் மகாதேவனின் ப்ளே லிஸ்ட் !