தமிழ் திரையுலகளில் 2002ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த பிரசன்னா முதல் முறையாக கால் பதித்தார். அப்போது முதல் பல படங்களில் ஹீரோவாகவும் மேலும் சில படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் 2002ஆம் ஆண்டு மணி ரத்னம் தயாரித்த 5 ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். நடிகர் பிரசன்னாவின் சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. விழிகளின் அருகினில் வானம்:
அழகிய தீயே என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு ரமேஷ் விநாயகம் இசையமைத்திருப்பார். 90 கிட்ஸ் வாழ்க்கையில் மிகவும் நெருங்கிய காதல் பாடல்களில் இதுவும் ஒன்று.
“கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட
மாற்றங்கள்
சொல் என்னும்
ஓர் நெஞ்சம் எனை
நில் என்னும் ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என்
வாழ்வில் ஒரு போர்க்காலம்
ஆரம்பம்”
2. ரயிலே ரயிலே:
பிரசன்னா நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் 5 ஸ்டார். இந்தப் படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலுக்கு அனுராதா ஶ்ரீராம் மற்றும் அவருடைய கணவர் ஶ்ரீராம் பரசுராம் இசையமைத்திருப்பார்கள்.
“நீயும் தான் செவ்வாய் மலையில் குகையிலே
நானும் தான் செல்வேன் இமைகளின் குகையிலே
சிவப்பு நிறமது வழியினில் தெரிந்ததும்
நிற்பாயே நீயும்..”
3. மேற்கே மேற்கே:
பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பார். இந்தப் பாடல் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
“வாசல் கதவை
யாரோ தட்டும் ஓசை
கேட்டால் நீதான் என்று
பார்த்தேன் அடி சகி பெண்கள்
கூட்டம் வந்தால் எங்கே நீயும்
என்றே இப்போதெல்லாம் தேடும்
எந்தன் விழி..”
4. மெல்ல சிரித்தாய்:
பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான கல்யாண சமையல் சாதம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹரிசரண் மற்றும் சின்மயி பாடியிருப்பார்கள்.
“இமைகளும் சேராமல்
கதைகள் பேச
இரவுகள் கரை சேர்ந்ததே
ஓ… உறவுகள் உரையானதே
புதிதாக
சிறு சிறுவென என்னை சுற்றும்
மோகம் ஓ....
இதழில் சுகமாய்
கவிதைகள் நாம் பாடலாம்..”
5. நான் போகிறேன்:
பிரசன்னா, சிபிராஜ் நடிப்பில் வெளியான நாணயம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இந்த பாடலுக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருப்பார். இப்பாடலை எஸ்பிபி பாடியிருப்பார்.
“என் தூக்கம்
வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி
கொண்டே வந்தாய் வார்த்தைகள்
தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்..”
இவை தவிர பிரசன்னா நடிப்பில் பல்வேறு ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க: உன்னிகிருஷ்ணன் குரலா வரும்? ஆமா.. இரவை ரம்மியமாக்கும் ப்ளேலிஸ்ட்..!