பொதுவாக ஒரு மொழியில் ஹிட் அடித்த திரைப்படத்தை மற்றொரு மொழியில் எடுப்பது வழக்கம். இப்படி ரீமேக் செய்யப்பட்ட படங்களில் கதை கரு ஒன்றாக இருந்தாலும் ஒரு சில இடங்கள் அந்த மொழிக்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் பட்டு வருகின்றது. அந்தவகையில் ஹிந்தியில் ஹிட் அடித்து தென் திரையுலகில் ரீமேக் செய்யப்பட்ட 10 படங்கள் என்னென்ன?


1.த்ரீ இடியட்ஸ்- நண்பன்:




பாலிவுட்டில் வெளியான சிறப்பான திரைப்படங்களில் ஒன்றாக த்ரீ இடியட்ஸ் கருதப்படுகிறது. அமிர் கான் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் நண்பன் என்ற பெயரில் ஶ்ரீகாந்த் மற்றும் ஜீவாவுடன் வெளியானது. இந்தப் படம் தமிழிலும் பெரியளவில் ஹிட் அடித்தது. 


 


2.ஜாலி எல்.எல்.பி- மனிதன்:




பாலிவுட் திரையுலகில் அர்ஷத் வார்ஸி மற்றும் போமன் இரானி ஆகியோரின் அசத்தலான நடிப்பில் இத்திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் ‘மனிதன்’ என்று ரீமேக் செய்யப்பட்டது. தமிழிலும் உதயநிதி மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. 


 


3.டெல்லி பெல்லி- சேட்டை:




ஹிந்தியில் டெல்லி பெல்லி என்ற பெயரில் வெளியான காமெடி கலந்த ஆக்‌ஷன் திரைப்படம் இது. தமிழில் ஆர்யா,சந்தானம்,பிரேம்ஜி நடிப்பில் சேட்டை என்ற பெயரில் இத்திரைப்படம் வெளியானது. 


 


4. பியார் கா பன்ச் நாமா- க்ரீன் சிக்னல்:




ஹிந்தியில் பியார் கா பன்ச் நாமா என்ற பெயரில் வெளியான ஜாலியான காதல் திரைப்படம் இது. இந்தப் படத்தில் ஒரு சில பிரச்னைகள் கூறப்பட்டாலும் பலரும் இதை கண்டு ரசித்தனர். இப்படத்தை தெலுங்கில் ‘க்ரீன் சிக்னல்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. எனினும் இது ஹிந்தி அளவிற்கு தெலுங்கில் வரவேற்பை பெறவில்லை. 


 


5. ஏ வெட்னஸ்டே - உன்னைபோல் ஒருவன்:




ஹிந்தியில் தீவிரவாதம் தொடர்பாக வெளியான சில சிறப்பான படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டிலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்தார். தமிழில் இத்திரைப்படம் உன்னைபோல் ஒருவன் என்ற பெயரில் வெளியானது.


6. கஹானி-அனாமிகா:




ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியன கஹானி திரையரங்குகளைவிட ஓடிடி தளத்தில் மிகவும் ஹிட் அடித்தது. இந்தத் திரைப்படம் தெலுங்கில் நயன்தாரா நடிப்பில் அனாமிகா என்ற பெயரில் வெளியானது. 


 


7. பிங்க்- நேர்கொண்ட பார்வை:




அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரைப்படம் இது. சமீப காலங்களில் அமிதாப் நடிப்பில் வெளியான சிறப்பான திரைப்படம் இது. தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இத்திரைப்படம் வெளியானது. இது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. 


 


8.கோசலா கா கோஷ்லா- பொய் சொல்ல போறோம்:




பாலிவுட்டில் வெளியான சிறப்பான காமெடி திரைப்படம் இது. இந்தப் படம் தமிழில் பொய் சொல்ல போறோம் என்ற பெயரில் வெளியானது. இதில் அன்றாடம் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் காமெடியாக எடுத்து கூறப்பட்டிருந்தது. 


 


9. தபாங்- கப்பர் சிங்:




பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியான திரைப்படம் தபாங். சல்மான் கான் ஏற்கெனவே சில தமிழ் திரைப்பட ரீமேக்கில் நடித்துள்ளார். அவருடைய படமான தபாங் தெலுங்கில் கப்பர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். 


 


10. ஜப் வீ மெட்- கண்டேன் காதலை:




ஹிந்தியில் ஜப் வீ மெட் என்ற பெயரில் காதல் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் தமிழில் கண்டேன் காதலை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பரத் மற்றும் தமன்னா நடிப்பில் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. 


இவ்வாறு பல பாலிவுட் படங்கள் தென் திரையுலகில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தென் திரையுலகில் ஹிட் அடித்த படங்கள் பலவும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:Kamal Haasan Next Movie: எதிர்பார்ப்பே எகிறுதே.. வெற்றிமாறனுடன் கைகோக்கும் கமல்?