Just In





Sarpatta Twitter Review | 'மீண்டும் மெட்ராஸ் ரஞ்சித்' - 'சார்பட்டா'வை கொண்டாடும் சோஷியல் மீடியா!
படத்திற்கு சமூக வலைதளங்கள் குட் என்ற பச்சை சிக்னல் காட்டியுள்ளன.

திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேற்று வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், இன்று படம் வெளியானது முதல் #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாக ஆரம்பித்துள்ளது. நேற்று இரவே படம் ஓடிடியில் வெளியானதை அடுத்து பலரும் படம் குறித்து பேசத்தொடங்கினர். இந்நிலையில் படத்திற்கு சமூக வலைதளங்கள் குட் என்ற பச்சை சிக்னல் காட்டியுள்ளன. படம் குறித்து பதிவிட்டுள்ள பலரும் மீண்டும் மெட்ராஸ் ரஞ்சித்தை பார்ப்பது மகிழ்ச்சி என குறிப்பிட்டு வருகின்றனர். ஆர்யாவின் உழைப்புக்கும், படக்குழுவின் உழைப்புக்கும் கைதட்டல்கள் என பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். ட்விட்டரில் சார்பட்டா குறித்து பதிவிடப்பட்ட சில பதிவுகளை பார்க்கலாம்.