ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் டேட்டிங் செய்வதாக பல மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர்கள் பிரிந்ததாக வந்த செய்திகள் ரசிகர்களின் இதயத்தை உடைத்துவிட்டன. முன்பெல்லாம் அவ்வப்போது இருவரும் நண்பர்களுடன் வெளியில் இருக்கும் வீடியோக்கள் வெளிவந்தது வைரலாவது வழக்கம். அவர்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவந்தது பார்த்திருப்போம். ஆனால் சில நாட்களாகவே அது குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் ரசிகர்கள் பிரிந்ததாக எண்ணினர்.



புதிய வீடியோவால் ஆச்சர்யம்


ஆனால் இரு நடிகர்களும் தங்கள் உறவு அல்லது முறிவு குறித்து ஒருபோதும் எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும், ரசிகர்கள் இப்போது அவர்கள் மீண்டும் ஒன்றாக இருப்பதாக பலர் நம்பி வந்தாலும் அதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது, ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்கள் நண்பர்களுடன் உணவகம் ஒன்றில் இருப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இரண்டு நடிகர்களும் மீண்டும் இணைந்தார்களா? என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Modi Biden Meeting: ”எதிர்காலம் நாம தான்” - பிரதமர் மோடிக்கு பைடன் தந்த சூப்பர் பரிசு..குஜராத்தில் களமிறங்கும் கூகுள் நிறுவனம்


ஸ்ரீனிவாஸ் உடன் காதலா?


ராஷ்மிகா மற்றும் விஜய் பிரிந்த வதந்திகள் ஹாட் செய்திகளாக வெளிவந்து இரண்டு மாதங்களுக்குப் பின் இந்த வீடியோ வந்துள்ளது. ராஷ்மிகா, தேவரகொண்டாவை அல்ல, தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை விரும்புவதாக செய்தி வெளியிட்டது பெரும் பரபரப்பானது. பின்னர், ஸ்ரீனிவாஸ் தனது டேட்டிங் வதந்திகள் குறித்து மௌனம் கலைத்து, அவற்றில் உண்மை இல்லை என்று கூறி முடித்தார்.


ராஷ்மிகாவும் நானும் நல்ல நண்பர்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “இந்த வதந்தி மட்டுமல்ல, சில காரணங்களால், நான் நடிக்கும் திரைப்படங்களைத் தவிர என் வாழ்க்கையில் நடக்கும் வேறு எதையும் மக்கள் பேசுவதை விரும்பாதவன் நான்," என்று அவர் மேலும் கூறினார்.






ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும்


ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது. முன்னதாக, இருவரும் தங்கள் புத்தாண்டு விடுமுறையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதற்கு முன், ஒரு பிரத்யேக நேர்காணலில், ராஷ்மிகா தான் விஜய்யுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதை குறித்து பகிர்ந்துள்ளார். "நாங்கள் நடிகர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மேலும் மக்கள் அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புவதால் வெளிச்சம் நம்மீது திரும்புகிறது. சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது என்பதை நான் பார்க்கிறேன், சில வீடியோக்களைப் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் விஜய்யும் நானும் இதுகுறித்து உட்கார்ந்து விவாதிப்பதில்லை. எங்களோடு 15 பேர் கொண்ட நண்பர்கள் கும்பல் உள்ளது, அவர்களுடன் கேரம் விளையாடுவோம்" என்று அவர் கூறினார்.