Just In





Vihaan Sneha : நடிகை சினேகா மகன் விஹான் பிறந்தநாள்.. நீச்சல் குளத்தில் சர்ப்ரைஸ் தெரியுமா?
சினேகா - பிரசன்னா மகன் விஹானின் 7-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாள் கொண்டாட்டமாக சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Sneha son Birthday: என் லட்டு குட்டிக்கு இன்னிக்கு பர்த்டே...வைரலாகும் சினேகா போட்டோஸ்
நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா நட்சத்திர தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இன்று இவர்களின் மகன் விஹான் இன்று 7வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாள் கொண்டாட்டமான இன்று நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் நீச்சல் குளத்தில் சந்தோஷமாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது திரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சினேகா இன்ஸ்டா போஸ்ட்:
தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சினேகா அதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லம். என் லட்டு, இந்த 7 ஆண்டுகளாக நீ எங்கள் வாழ்க்கையில் அன்பையும் சந்தோஷத்தையும் அள்ளி கொடுத்துள்ளாய். இது போன்ற குழந்தைக்காக தான் அனைத்து பெற்றோரும் கனவு காண்பார்கள். நீ எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். உன் மீது எனக்கிருக்கும் அன்பை வார்த்தைகளால் கூற முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஹான் தங்கம்!" என்று பதிவிட்டு இருந்தார் நடிகை சினேகா. விஹானின் வேறு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சினேகா.
சினிமாவில் ரீ என்ட்ரி :
ஒரு நீண்ட கால இடைவேளைக்கு பிறகு ’ஷாட் பூட் 3’ எனும் படத்தில்ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் தமிழ் சினிமாவில் புன்னகை அரசி சினேகா. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க உள்ளார்.