மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி எழுத்தாளராக அவதாரம் எடுக்கிறார். வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் அவரது ‘லால் சலாம்’ புத்தகத்தை வரும் 29 நவம்பர் அன்று வெளியிட இருக்கிறது. லால் சலாம் ஸ்மிருதி இராணியின் முதல் நாவல். 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டீஸ்கரில் 76 மத்திய ரிஸர்வ் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததைப் பின்னணியாக வைத்து இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டைப் பாதுகாப்பவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 






“எனது மனதில் நீண்ட நாட்களாக இந்தக் கதை ஓடிக்கொண்டிருந்தது.ஒருகட்டத்தில் என்னால் அதனை எழுதாமல் இருக்க முடியவில்லை. வாசகர்களும் இதனை விரும்பிப் படிப்பார்கள் என நினைக்கிறேன். முதல் நாவல் என்பதால் கதைப் போக்கைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறேன். பெரிதும் பதிவுபடுத்தப்படாத பல விஷயங்களை அதில் கூறியிருக்கிறேன்.” என ஸ்மிருதி இராணி கூறியுள்ளார். ஊழல் 







புத்தகத்துக்கான முன்பதிவு தற்போது அமேசானில் தொடங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது.ஊழலை எதிர்த்துப் போராடும் விக்ரம் பிரதாப் சிங் என்னும் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் த்ரில்லர், ஆக்‌ஷன், எமோஷன் என அத்தனையின் கலவையாக இருக்கும் என பதிப்பக நிறுவனம் கூறியுள்ளது. மத்திய அமைச்சர் ஒருவர் நாவலாசிரியர் அவதாரம் எடுப்பது பலரது எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.