தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவருடை டான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தச் சூழலில் அவருடைய அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. அதன்படி தெலுங்கு இயக்குநர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan) அடுத்து நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமா குழுமம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் தற்போது SK20 என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தத் திரைப்படம் தொடர்பான புதிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரயாபோசப்கா நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரயாபோசப்கா(Maria Ryaboshapka) ஒரு மாடலாக இருந்து வருகிறார். அவர் உக்ரைன் மொழியில் ‘எதர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பின்னர் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஸ்பெஷல் ஆப்ஸ் 1.5 சீரிஸில் நடாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் டான் மற்றும் அயாலன் ஆகிய திரைப்படங்களுக்கான படபிடிப்பை முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் ராஜ்கமல் ப்ளிம்ஸ் தயாரிப்பில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இது தொடர்பான அறிவிப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி அன்று வெளியானது. அந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:பீஸ்ட் சென்சார் குறித்து வெறிக்கொண்டு தேடிய விஜய் ரசிகர்கள்! ஸ்தம்பித்து போன சென்சார் போர்டு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்