பாலிவுட் நடிகர் ஷரூக்கானுடன் எடுத்த செல்ஃபியை டிவிட்டரில் பகிர்ந்து, தார் மற்றும் பஸ்ஸிகர் ஆகிய படங்களுக்காக நன்றி, நான் உங்களின் ‘டை கார்ட் ஃபேன்’ என குறிப்பிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான தமிழ் சினிமா பிரபலம் எஸ்.ஜே. சூர்யா.
எஸ்.ஜே. சூர்யா
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடித்த வாலி எனும் திரப்படத்தினை இயக்கியதின் மூலம் வெற்றிகரமாக அறிமுகமானவர், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. அதன் பின்னர் குஷி, ஞானி, நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை இயக்கி தனக்கென தனி பாணியினை உருவாக்கியவர் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. அவர் இயக்குனராக மட்டுமில்லாமல், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்துள்ளார். சமீபத்தில் தனது அசாத்திய நடிப்பினால் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா. மெர்சல், டான், மாநாடு, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் அசாத்திய வில்லனாக நடித்து தன்னை தமிழ் சினிமாவின் கிளாஸ் வில்லன் என நிரூபித்து வருகிறார். இன்னும் பல படங்களில் வில்லனாகவும் நடிக்கவும் உள்ளார்.
ஷாருக்கானுடன் சந்திப்பு
சமீபத்தில் நடந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானை சத்தித்த நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகர் எஸ்.ஜே. சூர்யா, “என் வாழ்வின் மறக்க முடியாத தருணம், மிகவும் மகிழ்ச்சி சார், உங்களின் தார் மற்றும் பஸ்ஸிகர் படங்களுக்கு தான் டை கார்ட் ஃபேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட்டில் பாலிவுட் நடிகர் ஷாரூகானை டேக் செய்துள்ளார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இந்த டிவீட் இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.