எஸ்.ஜே சூர்யா


ராயன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ள எஸ்.ஜே.சூர்யா அடுத்தபடியாக வில்லனாக நடித்து வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். க்ரித்தி ஷெட்டி நாயகியாக. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. கடந்த சில நாட்கள் முன்பாக இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 






அடுத்தடுத்து புதுப்புது கெட் அப் களில் நடித்து ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார் எஸ்.ஜே சூர்யா