தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த சூர்யாக்களில் இவரும் ஒருவர்.. எஸ்.ஜே. சூர்யா (SJ Surya) என்றாலே இருக்கு ஆனா இல்ல .. இருக்குற மாறி இருக்கு ஆனா இல்ல என்ற டயலாக் நினைவிற்கு வரும். சினிமா துறையில் வாலி, குஷி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும் எஸ்.ஜே. சூர்யாவின் ஆக்டிங் பெர்ஃபார்மன்ஸ் அதையே தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்திருக்கும்.

Continues below advertisement


இவர் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் வித்தியாசமான ரோல்களை நடித்திருப்பார் எஸ்.ஜே.சூர்யா. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக 2004 ஆம் ஆண்டு  வெளியான நியூ படத்தில் இவர் அறிமுகமாகியிருந்தாலும் அதற்கு முன்பே ”நெத்தியடி”, ”கிழக்கு சீமையிலே”, ”ஆசை” ஆகிய படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.






கடமையை செய் படக்குழுவினரோடு நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களை பேசினார். ”லயோலா காலேஜில் டிகிரி முடிச்சிட்டு சினிமா பண்ணனும்னு வீட்டுல இருந்து ஒரு பைசா வாங்காம வந்தாச்சு. காலேஜில ஒரு ப்ரெண்டு அவன்தான் ஓட்டல் ஓனர், முதல்ல பில் போட்ற வேலை செஞ்சேன்.


9:30 மணிக்கு ஆரம்பிச்சேன். 2:30 வர வேலை பாத்தேன். அப்பறம் எனக்கு பதில் இன்னொரு நபர் வந்து சாப்பிட போக சொல்லிட்டாரு. அப்புறம், பெரிய தட்டுல சாப்பாடு போட்டாங்க...ஒரு மாறி ஆயிட்டுசு.. பர்ஸ்டு ஒழச்சு ஒரு சாப்பாடு சாப்டேன்..  எவ்வளவு உயரத்துக்கு போனாலும் என்ன பண்ணாலும் அந்த நாள் வந்து வேற லெவலுங்க சூப்பரான மொமெண்ட் ” என கண் கலங்கிட்டே எஸ்.ஜே.சூர்யா பேசினார்.






இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கடமையைச் செய் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை, 2016 ஆம் ஆண்டு வெளிவந்த முத்தின கத்திரிக்காய் படத்தை தயாரித்த வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதில் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி பேசினர். இப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படும் என எஸ்.ஜே சூர்யா முன்பு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.