பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி , பொழுதுபோக்கு துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். வெகுளியான பேச்சு , குழந்தைத்தனமான குணம் என பலரையும் கவர்ந்தவர் ஷிவாங்கி. பாடகியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட சிவாங்கிக்கு பெரிய பிரேக்காக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
அங்குதான் ஷிவாங்கிக்கென தனி ஆர்மிக்கள் உருவாக தொடங்கியது. சிவாங்கியின் முக பாவனைகள் மீம்ஸுகளாகவும், எமோஜிகளாகவும் சமூக வலைதளங்களை ஆதிக்கம் செய்து வருகிறது. சாதாரண சுட்டிப்பெண்ணாக வலம் வந்த சிவாங்கி தற்போது டான் படம் மூலமாக நடிகையாகவும் அறிமுகமாகியுள்ளார். தன்னை குறித்து வரும் விமர்சனங்களை சிவாங்கி எப்படி கையாளுகிறார் என்பது குறித்தும் நேர்காணலில் ஷேர் செய்திருக்கிறார்.
"நாம் பிரபலமான பிறகு எம்.டி.சி பஸ்ஸில் பயணிப்பதை தவிர்த்துவிட்டேன். என்னை குறித்து வரும் சர்ச்சைகள் வரும்பொழுது அதை எப்படி எதிர்கொள்வேன் என்றால் , ம்ம்ம்... எனக்கு சின்ன வயசுலேயே இது மாதிரியான சர்ச்சைகளை பார்ப்பதால் அதுக்கு டியூன் பண்ணி டியூன் பண்ணி ரொம்ப ஸ்ட்ராங் ஆகிடுவோம். அவ்வளவுதான். காலையில எழுந்து பாட்டு பிராக்டிஸ் பண்ணனும். அதை நான் பண்ணுறது இல்லை. ஏதோ சூப்பர் சிங்கர்ல பாடுனதால என் வண்டி ஓடுது. இனிமேல் பிராக்டிஸ் பண்ணாதான் பத்து வருடங்களுக்கு வண்டி ஓட்ட முடியும்.
நான் இப்போ வரைக்கு பயப்படும் விஷயம் படிக்கட்டில் இறங்குவது, வண்டி ஓட்டுறது, அப்பறம் பெரிய நாயை கண்டு பயப்படுவதுதான்” என ஷேர் செய்திருக்கிறார் சிவாங்கி.