பராசக்தி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது .டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் டான் பிக்ச்சர்ஸ் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் , அதர்வா , ரவி மோகன் , ஶ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பராசக்தி ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத் தக்கது
பராசக்தி முதல் பாடல் ப்ரோமோ
ஒறுதிச் சுற்று , சூரரைப் போற்று ஆகிய இரு வெற்றிப்படன்களை தொடர்ந்து தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பராசக்தி. முன்னதாக இப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் படத்திற்கு புறநாநூறு என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின் சூர்யா இப்படத்தில் இருந்து விலக சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையக் கதையாக கொண்டு பீரியட் டிராமாவாக உருவாகி வருகிறது பராசக்தி திரிப்படம் . கடந்த ஆண்டு அமரன் படம் சிவகார்த்திகேயனின் கரியலில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அதே போல் பராசக்தி அவரது கரியரை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் 100 ஆவது படம்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை ஜிவி பிரகாஷ் உருவாக்கி வைத்திருக்கிறார். வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் படத்தில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் பல்வேறு சூப்பர்ஹிட் ஆல்பம்களை கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு அமரன் படத்திற்கு ஜிவி இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அத்தனை பாடல்களும் ரசிகர்களால் ரிபீட் மோடில் கேட்கப்படுகின்றன. தற்போது பராசக்தி படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.