சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலை மதராஸி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இத்துடன் மதராஸி படத்தின் டிரெய்லர் மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படம் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்ற நிலையிலும் மதராஸி படத்திற்கு ரசிகர்களிடம் சுமாரான எதிர்பார்ப்பே இருந்து வருகிறது.
கூவி கூவி கொடுத்தும் விற்காத டிக்கெட்கள்
மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் முன்னதாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டது. பின் நிகழ்விற்கு மிக குறைவான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. இதனால் நேரு அரங்கத்தைவிட சிறியதான சாய் ராம் கல்லூரியில் இந்த நிகழ்வை படக்குழு ஒருங்கிணைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இருந்து மதராஸி இசை வெளியீட்டிற்கான டிக்கெட்களை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கூவி கூவி விற்று வருகிறார்கள்.
மதராஸி பட விமர்சனம்
மாவீரன் படத்திற்கு பின் நல்ல ஆக்ஷன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஏற்றபடி முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக மதராஸி உருவாகியுள்ளது. துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்கள் . கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். பிஜூ மேனன் , விக்ராந்த் பிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் இதுவரை வெளியான இரு பாடல்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
செப் 5 ரிலீஸ்
மதராஸி வெளியாகும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ல் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட்டில் கான்ஜூரிங் படத்தின் இறுதி பாகம் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் அனுஷ்கா . விக்ரம் பிரபு நடித்துள்ள காட்டி திரைப்படமும் இதே நாளில் வெளியாகிறது.