கெளண்டமணி , வடிவேலு , விவேக் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் உச்சத்திற்கு சென்றவர் நடிகர் சந்தானம். கதை மொக்கையாக இருந்தாலும் அந்த படத்தில் சந்தானத்தின் காமெடியால் மட்டுமே பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. ஹீரோ ரோலுக்கு சந்தானம் திரும்பியதில் இருந்து  ஆர்யா , ஜீவா , விஷால் ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியையே சந்தித்துள்ளன. இன்றுவரை சந்தானம் இல்லாமல் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை கொடுக்க திணறி வருகிறார்கள் இந்த நடிகர்கள் .சந்தானம் ஹீரோவாக மாற ஆரம்பித்ததும், இவர்களும் அவர்களது மார்க்கெட்டும் முற்றிலுமாக உடைந்து போனது ஆர்யா, ஜீவா, உதயநிதி, விஷால்  இவர்கள் அனைவரும் தங்களது படங்களில் பெரும்பாலும்  சந்தானத்தையே நம்பியிருந்தனர். 

சந்தானம் ஜீவா கூட்டணி

சிவா மனசுல சக்தி , என்றென்றும் புன்னகை என சலிக்காத படங்களை ஜீவாவும் சந்தானமும் இணைந்து கொடுத்துள்ளார்கள்.  வந்தான் வென்றான், சிங்கம்புலி போன்ற சாதாரண சராசரி கதைகள் சந்தானம் ஜீவாவின் காம்போவால் பெரிய ஹிட் அடித்தன. யான், கீ, கொரில்லா, ஜிப்சி என சந்தானம் இல்லாமல் ஜீவா நடித்த  பல படங்கள் ஜீவாவுக்கு தோல்வி படங்களாக அமைந்தன. 

சந்தானம் உதயநிதி கூட்டணி

நடிப்பே வராத உதயநிதி ஸ்டாலினின் நடிப்பை நாம் சகித்துக் கொண்டது சந்தானத்தால் தான். ஓகேஓகே, நண்பேன்டா, இது கதிர்வேலன் காதல்  என மூன்று படங்களிலும் சந்தானத்தை வைத்தே  வெற்றிபடமாக்கினர்.  சந்தானம் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் நடித்த பெரும்பாலான படங்கள் மொக்கை படங்களே. 

சந்தானம் ஆர்யா கூட்டணி

பாஸ் எ பாஸ்கரன் , சேட்டை , ராஜா ராணி  என ஆர்யாவின் கரியரின் முக்கியமான படங்களில் சந்தானம் இருந்தார். இதில் சேட்டை படமாக தோல்வி என்றாலும் இந்த படத்தின் காமெடி காட்சிகள் பெரிய ரீச் கொடுத்தன. ஆர்யாவுக்கு, மகாமுனி, சார்பட்டா & அரண்மனை 3 தவிர, சந்தானம் இல்லாமல் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வசூலில் படுதோல்வியை சந்தித்தன. 

மிர்ச்சி சிவா ,  கூட சந்தானம் இல்லாமல் தமிழ் படம் 2 க்குப் பிறகு  ஒரு வெற்றியையும் பெறவில்லை. தில்லு முல்லு படத்தில் அவரது 4 நிமிட கேமியோ மட்டுமே படத்தை வெற்றியடையச் செய்தது. 12 வருடங்கள் கழித்து வெளியான விஷாலின் மதகஜராஜா திரைப்படம் சந்தானத்திற்காகவே ஓடியது. இப்படி பல நடிகர்களின் படங்களில் சந்தானம் இருந்ததே அந்த படத்திற்கு பெரிய மார்கெட் ஏற்படுத்தி கொடுத்தது. சந்தானத்திற்கு பின் பல நகைச்சுவை நடிகர்கள் வந்த பின்னும் அவரது இடம் என்பது வெற்றிடமாகவே இருந்து வருகிறது.