Amaran Box Office : சென்சுரிக்கு மேல் சென்சுரி போடும் எஸ்.கே.. 3 நாளில் அமரன் பட வசூல் எவ்வளவு தெரியுமா?

Amaran Box Office : டாக்டர் , டான் ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளது

Continues below advertisement

அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகியது. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு , இந்தி , கன்னடம் , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அமரன் படத்திற்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலும் காமெடி ரோல்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Continues below advertisement

அமரன் பட வசூல்

அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் 42 கோடி வசூலித்திருந்தது. சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை வெளியான படங்களில்  முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் சாதனை படைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நாட்களில் அமரன் திரைப்படம் 100 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரு படங்கள் 100 கோடி வசூல் இலக்கை எட்டிய நிலையில் தற்போது அமரன் படம் இந்த இலக்கை எட்டியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola