SK 23: எகிறும் எதிர்பார்ப்பு! சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த துப்பாக்கி பட வில்லன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ் கே 23 படத்தில் நடிகர் வித்யுத் ஜமால் இணைந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்தி திரையுலகின் பிரபல நடிகர் வித்யுத் ஜமால். இவர் ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

Continues below advertisement

எஸ்.கே 23:

அமரன் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 படத்தில்  நடித்து வருகிறார். ருக்மினி வசந்த் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று இயக்குநர் முருகதாஸ் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.  எஸ்.கே 23 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜமால்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய்  நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம் துப்பாக்கி. இந்தப் படத்தில் இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். தமிழ் படங்களில் இந்தி வில்லன்கள் நடித்து வருவது பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வந்தாலும் இந்தப் படத்தில் வித்யுத் ஜம்வாலின் நடிப்பு அவரது ஸ்டண்ட் காட்சிகள் என ரசிகர்களால் பாராட்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தி நடிகர்கள் தமிழில் வில்லனாக நடிக்கும் போக்கும் அதிகரித்தது.

துப்பாக்கி படம் தவிர்த்து அஜித் குமார் நடித்த பில்லா 2 , சூர்யா நடித்த அஞ்சான் படத்திலும் நடித்தார் வித்யுத் ஜமால். ஆனால் இந்தப் படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாத காரணத்தினால் தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் போயின. தொடர்ந்து இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து வந்த வித்யுத் ஜமாலை தற்போது மீண்டும் கம் பேக் கொடுக்க அழைத்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

எஸ்.கே 23 படத்தில் வித்யுத் ஜமால்  நடிக்க இருப்பதாகவும் அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. துப்பாக்கி படத்தைப் போலவே இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். சாய் பல்லவி இந்தப் படத்தில்  நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ  வெளியானது

Continues below advertisement
Sponsored Links by Taboola