Sivakarthikeyan Prince: ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ரூ.100 கோடி சம்பாதித்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்?

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஃபேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஃபேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

Continues below advertisement

இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.  தமன் இசையமைக்கும் பிரின்ஸ் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் அனுதீப் பிரின்ஸ் பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று கூறியிருந்தார். தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி என்பதால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே படம் வெளியாக இருப்பது சிவகார்த்திகேயனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பிரின்ஸ் படத்தில் முதல் பாடல்  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிம்பிலிக்கி பிலாக்கி என தொடங்கும் அந்த பாடலை விவேக் எழுதியிருந்தார். இசையமைப்பாளர் அனிருத், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் இப்பாடலை பாடியிருந்தனர். இதுதொடர்பான பாடல் வரிகள் அடங்கிய வீடியோவில் சிவகார்த்திகேயனின் டான்ஸ் அனைவரையும் கவர்ந்தது. 

பிரின்ஸ் படத்தின் 2 ஆம் பாடலாக ஜெஸிக்கா பாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதி தான் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தீபாவளிக்கு 24 நாட்களே இருந்த நிலையில் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தீபாவளிக்கு கண்டிப்பா ரிலீஸ் என்ற அறிவிப்போடு ஒரு போஸ்டர் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகியிருந்தது. 

ரூ.100 கோடி வியாபாரம்:
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் ரூ.100 கோடி ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ரூ.100 கோடி சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் ரூ.40 கோடிக்கு விற்பனையாகி உள்ளன. தியேட்டர் உரிமை மூலம் ரூ.45 கோடி சம்பாதித்துள்ளது. ஆடியோ உரிமைகள் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளது.  சிவகார்த்திகேயன் படங்களிலேயே பிரின்ஸ் திரைப்படம் தான் ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ரூ.100 கோடி சம்பாதித்த படம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. பிரின்ஸ் படம் கார்த்தியின் சர்தார் படத்துடன் நேருக்கு நேர் களத்தில் இறங்கும். சிவகார்த்திகேயன், சர்தார் என இருவரின் ரசிகர்களுமே இந்த தீபாவளியை வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.

Continues below advertisement