Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியானது, வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியானது வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமரன் திரைப்படம்:
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி நடித்துள்ள படம் அமரன், வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Just In




ராணுவ வீரர் கதை?
தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்தன் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர்களுடன் புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷ்யாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மையான சம்பவத்தை அடிப்படையான கதையில் முழு ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்துள்ளார். இதன் காரணமாகவும், இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டடமாக திரையரங்கில் வெளியாக உள்ளது.
இசை வெளியீட்டு விழா:
இசை வெளியீட்டு விழாவானது, வரும் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.