பல மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் இப்படம் பெரிய வசூல் எடுக்கவில்லை. தற்போது முழுக்க முழுக்க கமர்சியல் படத்தோடு வந்துள்ளார் விஜய் சேதுபதி.
ஏஸ் டிரைலர்
விஜய் சேதுபதி , ருக்மினி வசந்த் , யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் ஏஸ். திவ்யா பிள்ளை, பப்லூ பிருத்வீராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ் குமார், டெனெஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுபயா, கார்த்திக் ஜே, நகுலன், ஜஹ்ரினாரிஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
ஆறுமுக குமார் இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஏஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது . நடிகர் சிவகார்த்திகேயன் இந்த டிரைலரை வெளியிட்டார். வரும் 23 ஆம் தேதி மே இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது