நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில்  ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.  தமன் இசையமைக்கும் பிரின்ஸ் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியீடாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 






இதனிடையேபிரின்ஸ் படத்தில் முதல் பாடல்  கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிம்பிலிக்கி பிலாக்கி என தொடங்கும் அந்த பாடலை விவேக் எழுதியிருந்தார். இசையமைப்பாளர் அனிருத், ரம்யா பெஹாரா, சாஹிதி சாகந்தி ஆகியோர் இப்பாடலை பாடியிருந்தனர். இதுதொடர்பான பாடல் வரிகள் அடங்கிய வீடியோவில் சிவகார்த்திகேயனின் டான்ஸ் அனைவரையும் கவர்ந்தது. 


தொடர்ந்த் பிரின்ஸ் படத்தின் 2 ஆம் பாடலாக ஜெஸிக்கா பாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதி தான் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தீபாவளிக்கு 24 நாட்களே இருந்த நிலையில் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தீபாவளிக்கு கண்டிப்பா ரிலீஸ் என்ற அறிவிப்போடு ஒரு போஸ்டர் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகியிருந்தது.  


அதன்பின் பிரின்ஸ் படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 21 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் படம் முதல் முறையாக தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் இப்படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் ட்ரெய்லர் நாளை (அக்டோபர் 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






இதுதொடர்பான வீடியோவில் வரும் சிவகார்த்திகேயன்  டாக்டர், டான் படங்களுக்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளிக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் என்பதால் ரொம்ப எக்ஸைட்மென்ட் ஆக உள்ளது. நிறைய காமெடி என்பதை தாண்டி இதில் முக்கியமான மெசெஜ் உள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.