பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் நிலையில், அந்தப்படங்கள் குறித்தான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை அனைவருக்கும் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் மெகா ஹிட் அடித்து 100 கோடி வசூலித்த நிலையில், அவரது அடுத்தப்படமான ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் மரியா ரியாபோஷப்கா, சூரி, சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்திற்கு அண்மையில் சென்சார் தரப்பில் இருந்து யூ சான்றிதழ் வழங்கப்பட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.
அந்த சந்திப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குளில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில் பிரின்ஸ் மிகப்பெரிய அளவில் 600 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதே போல சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்காக முதல் காட்சி காலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இந்தப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஆகும். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருக்கிறார்
பிரின்ஸ் படத்திற்கு போட்டியாக கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சர்தார்’ படம் அன்றைய நாளில் வெளியாக இருக்கிறது. தனது கேரியரில் மிக முக்கியமான படமாக சர்தார் படம் கார்த்தி கூறியிருக்கிறார். 15 கெட்டப்புகளில் கார்த்தி நடித்திருக்கும் இந்தப்படம் 150 லொக்கேஷன்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படத்திற்கு சென்சார் தரப்பில் இருந்து யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷிக்கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோரும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலாவும் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு முதல்காட்சி 8 மணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.