2026 ஆண்டு பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் பராசக்தி ஆகிய இரு படங்கள் வெளியாக இருக்கின்றன. விஜயின் கடைசி படமாக உருவாகியிருக்கும்  ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் நிலையில் பராசக்தி ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது. விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயன் படம் வெளியிடப்படுவதாக இருதரப்பு ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் தொடர் கருத்து மோதல் நடந்து வருகிறது. இப்படியான நிலையில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்கள். 

Continues below advertisement

Continues below advertisement